பிளஸ்-1 மாணவியை மிரட்டிபலாத்காரம் செய்த உறவினர் கைது

பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பிளஸ்-1 மாணவியை மிரட்டிபலாத்காரம் செய்த உறவினர் கைது
Published on

பொள்ளாச்சி

திருப்பூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

வாலிபர் அனைமலையில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வாலிபர் தனது தாய் மாமன் மகளான பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகமாகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்-1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 29 வயது வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com