search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uttarkhand"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    நாட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:-

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 'இந்துத்துவா' பரிசோதனை கூடமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
    • உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.

    மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
    • இரு தரப்பினருக்கும் தைரியம் வரவழைக்கும் முயற்சி என மேலாளர் கூறினார்

    மலைமாநிலம் எனப்படும் வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பில் மழை, வெயில், பனி என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் மலைச்சரிவுகளால் பயணம் தடைபடாத வகையில் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன.

    அந்த சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இயந்திர கோளாறினால் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) ஒரு குழாய் வழியாக அந்த சுரங்கத்திற்குள் ஒரு தரைவழி தொலைபேசி சாதனத்தை (landline instrument) அனுப்ப தயார் நிலையில் உள்ளது. அதற்கு வேண்டிய தொலைத்தொடர்பு லைன்களை அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "இந்த சாதனத்தின் மூலம் சிக்கி கொண்டுள்ள பணியாளர்கள், வெளியே கவலையுடன் உள்ள அவர்களின் குடும்பத்தினருடன் பேசி கொள்ள முடியும். இது இரு தரப்பினருக்கும் ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கும்" என அம்மாவட்ட பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் (DGM) ராகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.

    பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த மீட்பு நடவடிக்கையை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி துரிதப்படுத்தியுள்ளார்.

    • உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
    • மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.

    துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது.

    தொழில்நுட்பம் கோளாறு காரணமாக துளையிடும் பணி நேற்று மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், இதுகுறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "உத்தரகாண்டில் மீட்பு பணியின்போது சிக்கி உள்ள இயந்திரத்தின் பாகங்களை விரைவாக அகற்ற வேண்டும்.

    ஆகர் இயந்திர பாகங்களை அகற்ற தேவையான இயந்திரங்கள், தொழில் நுட்பங்களை விரைந்து வாங்குமாறு" அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Uttarakhand
    டேராடூன்:

    இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கூடுமான வரையில் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஜார்காண்ட் மாநிலத்தின் பக்தா என்ற கிராமத்தில் வீடு புகுந்து சிறுமியை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்ற 4 பேர், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

    அதோடு நின்றுவிடாத அந்த கொடியவர்கள், அந்த 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Uttarakhand
    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Uttarakhand
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு இன்று சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 40 பயணிகள் வரை உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Uttarakhand
    உத்தரகாண்ட் மாநிலத்தில் காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் நானக்மட்டா பகுதியில் இன்று ஒரு காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. 

    இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
    ×