என் மலர்
நீங்கள் தேடியது "நிவாரண நிதி"
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார்.
- தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கடந்த 5ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதற்கிடையே சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார். மாலையில் தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அதன்பின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அப்போது, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அம்மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இத்துடன், வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கு, சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது, தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைப்பது, பள்ளிகளை புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
- உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.455.60 கோடி பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்தது.
- கேரளாவுக்கு ரூ.153.20 கோடி பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்தது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.455.60 கோடியும் அசாம் மாநிலத்திற்கு ரூ.375.60 கோடியும் கேரளாவுக்கு ரூ.153.20 கோடியும் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (SDRF) மத்திய பங்காக வழங்கியுள்ளது.
மேலும், மணிப்பூருக்கு ரூ.29.20 கோடியைம், மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடியும், மிசோரமுக்கு ரூ.22.80 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது பெய்த அதிகனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இந்த மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த திரு.செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த திருமதி.லட்சுமி க/பெ.கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.ராமமூர்த்தி (வயது 38) த/பெ.ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த திரு.ராமஜெயம் (வயது 27) த/பெ.கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த திரு. வைரமணி (வயது 32) த/பெ. காந்தி ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் திரு.லிங்குசாமி (வயது 45), திரு.மணிகண்டன் (வயது 40), திரு.கருப்பசாமி (வயது 27), திருமதி.முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.அழகுராஜா (வயது 28) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
- ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
- அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.
திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். இதவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்கள் இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.
முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆரமுத தேவசேனா அவர்களின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஆரமுத தேவசேனா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆரமுத தேவசேனா அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.
மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சாலை வசதி,குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 383 மனுக்களை பெறப்பட்டது.
- வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி,குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 383 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 5நபர்களின் வாரிசுதாரர்களுக்கு வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 லட்சம்மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், மாவட்ட ஆதிதிராவிடர்நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்துஅரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- விபத்தில் இறந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது
- விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
பெரம்பலூர்,
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5-ந்தேதி அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் சென்ற வேன், முன்னால் சென்ற டிராக்டரை முந்தியபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அரணாரையை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45), காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ், ஆம்புலன்ஸ் மீது மோதியதில் டிரைவர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் புதுப்பெண், முதியவர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை நேற்று கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கினார்.
- நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
- மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் , செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, நான்கு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
- இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி, மிச்சாங் புயலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், மாநில அரசுடன் இணைந்து இந்த பேரிடரை எதிர்த்து போராடுவோம் எனவும் அறிவித்துள்ளது.
- சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
- தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியீடு.
மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மிச்சாங் புயல் பாதிப்பால் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மிச்சாங் புயலால் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் இன்னல்களில் இருந்து தமிழக மக்களை காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மக்கள் சேவைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கும் வகையிலும், அரசின் முயற்சியில் கைகோர்க்கும் வகையில், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், தனது உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.
- அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்றால் வெளியிடலாம். என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.
மத்திய அரசு ரூ.1,000 கோடி மட்டுமே பேரிடர் நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ரூ.5,000 கோடி வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால் அதில் ஐந்தில் ஒரு பங்கு என்கிற வகையில் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்க முன் வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசு அல்லது பிரதமரை வலியுறுத்தி ரூ.5,000 கோடி பெறுவதற்கு ஆதரவு தர முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும்.
- வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.
சென்னை:
மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதைதொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என கூறியுள்ளார்.
- நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டம்.
- 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக பொதுமக்களுக்கு 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று கூறப்படுகிறது. அதாவது,
* ரேசன் அட்டை வைத்திருப்போர்.
* ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை.
* சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நிவாரண நிதியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






