என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் கலெக்டர்"

    • வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பணியின் முதல் நாளிலேயே அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை கண்ட சப்-கலெக்டர் கோபம் அடைந்தார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த ரிங்கு சிங் அந்த நபரை தோப்புக்கரணம் போட வைத்தார்.

    இந்த நடவடிக்கையை கண்ட அப்பகுதி வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சப்-கலெக்டருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரிங்கு சிங் ராஹி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. நிலைமை விபரீதமாவதை கண்ட சப்-கலெக்டர் வக்கீல்கள் முன்னிலையில் தனது காதுகளை பிடித்து உட்கார்ந்து அமர்ந்து தோப்புக்கரணம் போட்டார்.

    மேலும் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ரிங்கு சிங் ராஹி கூறுகையில், வக்கீல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நல்ல உறவு பாதிக்கப்படும் என்பதால் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்டேன் என்றார்.

    • ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
    • அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.

    திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். இதவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்கள் இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

    முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆரமுத தேவசேனா அவர்களின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    ஆரமுத தேவசேனா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆரமுத தேவசேனா அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.

    மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார்.
    • ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 243 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சப்-கலெக்டர் விஷ்ணுராஜ் எதிர்கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை, போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில மறுவகைப்படுத்துதல் வழக்குகள் அதிகம் என்பதால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இருப்பதால் கோர்ட்டு விதிக்கும் காலக்கொடுவுக்குள் தீர்ப்பை அமல்படுத்த முடியாததால் சப்-கலெக்டர் இத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
    • இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் பேட்மிண்டன் வீரர்களை சப் கலெக்டர் ஒருவர் துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பேட்மிண்டன் வீரர்கள், "நாங்கள் உள்விளையாட்டு அரங்கில் விளையாடி முடித்து கிளம்பும் நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த துணை ஆட்சியர் சிஷிர் குமார் மிஸ்ரா எங்களிடம் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்டார். ஏற்கனவே விளையாடி முடித்த களைப்பில் இருந்த நாங்கள் சோர்வாக இருக்கிறது இப்போது விளையாட முடியாது என்று கூறினோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு எங்களை துரத்தி துரத்தி அடித்தார்" என்று தெரிவித்தனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த துணை ஆட்சியர் சிஷிர் குமார், "பேட்மிண்டன் வீரர்கள் என்னிடம் அநாகரீகமான மொழியில் பேசினார்கள். அதனால் தான் அடித்தேன்" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தரன்ஜோத் சிங் தெரிவித்தார்.

    ×