என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub Collector"

    • வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பணியின் முதல் நாளிலேயே அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை கண்ட சப்-கலெக்டர் கோபம் அடைந்தார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த ரிங்கு சிங் அந்த நபரை தோப்புக்கரணம் போட வைத்தார்.

    இந்த நடவடிக்கையை கண்ட அப்பகுதி வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சப்-கலெக்டருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரிங்கு சிங் ராஹி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. நிலைமை விபரீதமாவதை கண்ட சப்-கலெக்டர் வக்கீல்கள் முன்னிலையில் தனது காதுகளை பிடித்து உட்கார்ந்து அமர்ந்து தோப்புக்கரணம் போட்டார்.

    மேலும் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ரிங்கு சிங் ராஹி கூறுகையில், வக்கீல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நல்ல உறவு பாதிக்கப்படும் என்பதால் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்டேன் என்றார்.

    • ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
    • அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.

    திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். இதவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்கள் இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

    முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆரமுத தேவசேனா அவர்களின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    ஆரமுத தேவசேனா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆரமுத தேவசேனா அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.

    மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொழிலதிபர் ஜானகிராமன் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான லட்சியத்தை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று உதவி கலெக்டர் குருச்சந்திரன் பேசினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் கல்வி சங்க தலைவர் முகமது அப்துல்காதர் தலைமை தாங்கினார். பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர்கள் கணேசன், பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்று பேசினார்.

    ரூ. 500 கோடி

    தொழிலதிபர் ஜானகிராமன் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் தமிழ் வழியில் கற்றாலும் ஆங்கில வழியில் கற்றாலும் அவர்களுக்கு எழுத்து திறமையில் இன்னும் மேம்பட வேண்டிய நிலையில் உள்ளனர். பொதுவாக கல்லூரியில் மேற்படிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுக்கான முனைப்பில் ஈடுபடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கான பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஆண்டிற்கு ரூ. 500 கோடிக்கு மேல் புழங்கி வருகிறது.

    வாசிப்பு திறன்

    இப்படியான நிறுவனங்களும் மாணவர்க ளை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களையே மீண்டும் கற்க வைக்கின்றனர். அப்போது பழைய புத்தகங்களை தேடி மாணவர்கள் அலைய நேரிடுகிறது. இதனை தவிர்க்க தொடக்க காலத்தில் இருந்தே பள்ளி மாணவ- மாணவிகள் உரிய படங்களை கவனமாக கற்றுக் கொள்ள வேண்டும்.

    பாடப் புத்தகங்களை மட்டுமின்றி நல்ல கதை புத்தகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை கண்டிப்பாக தினசரி படிக்க வேண்டும். இதன்மூலம் வாசிப்பு திறன் மேம்பட்டு மொழி அறிவும் பொது அறிவு இயல்பாகவே கிடைத்துவிடும்.

    மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான லட்சியத்தை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும். கலெக்டர், டாக்டர் போன்ற பதவிகள் மட்டுமின்றி அரசு துறையில் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு போன்ற வரிசைகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் வேலைகளில் தமிழர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில் நீங்கள் தரமான கல்வியை கடினமான முயற்சியால் பெற்று வளர்ச்சியை எட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பள்ளியின் கல்வி குழு நிர்வாக உறுப்பினர்கள் அமிர்தராஜ், ராமசாமி, சண்முக கனி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார்.
    • ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 243 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சப்-கலெக்டர் விஷ்ணுராஜ் எதிர்கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை, போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில மறுவகைப்படுத்துதல் வழக்குகள் அதிகம் என்பதால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இருப்பதால் கோர்ட்டு விதிக்கும் காலக்கொடுவுக்குள் தீர்ப்பை அமல்படுத்த முடியாததால் சப்-கலெக்டர் இத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.
    • 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

    பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார். இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சனிடம் சினிமா பாணியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சன் லஞ்சமாக பல லட்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    லஞ்சமாக பெற்ற பணத்தில் துணை ஆட்சியர் உல்லாச வாழ்க்கை நடத்தியுள்ளனர். குடும்பத்திற்கு மற்றும் மருத்துவ செலவிற்காக செலவிட்டு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

    விசாரணையின்போது, 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.

    • திண்டிவனம் சப்-கலெக்டராக இருந்த அமீத் தெற்கு மண்டல உதவி ஆட்சியரராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
    • கலெக்டர் கட்ட ரவி தேஜா திண்டிவனம் சப்-கலெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சப்-கலெக்டராக இருந்த அமீத், சென்னை பெருநகர இணை ஆணையர் தெற்கு மண்டல உதவி ஆட்சியரராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, திருவண்ணாமலையில் பயிற்சி சப் -கலெக்டர் கட்ட ரவி தேஜா திண்டிவனம் சப்-கலெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.இதனையடுத்து திண்டிவனம் ஜக்காம்பேட்டையிலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில், கட்ட ரவி தேஜா பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர்.
    • ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் கடந்த, 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி நிறைவடைந்த நிலையில், பல்வேறு அரசுத்துறைகளிலும் பணியாற்றி வந்தனர். புதுடில்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன், திருப்பூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்ப ட்டுள்ள ஸ்ருதன்ஜெய் நாராயணன், சினிமா நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விழாவுக்கு சப்-கலெக்டர் ரிசாப் தலைமை தாங்கினார்.
    • தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் 75-வது சுதந்திர தின பவள விழாவில் சப்-கலெக்டர் ரிசாப் கலந்து கொண்டு, தலைமை தாங்கி முக்கூடல் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நெடுஞ்சாலை ஓரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவில் தாய் வீடு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆறுமுகம், கோமதி அம்மாள், அனிதா, சுதா, அருள் மற்றும் பொழில் தன்னார்வ இயக்கம், கோமதி அம்மாள் - கலாம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, டீரிம் டிவைனி பவுண்டேசன், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முக்கூடல் நகர வியாபாரிகள் சங்க தலைவர் பூமிபாலக பெருமாள், நாகராஜன், தன்னார்வலர்கள் ஆதிமூலம், பால்துரை, முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின், கிராம நிர்வாக அலுவலர் பொன்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
    • காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகின்ற 28-ந் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி,மேல்மலையனூர், வட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சப்-கலெக்டர் அறிவித்து உள்ளார். 

    தேன்கனிக்கோட்டை அருகே திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (21). இவர் தளியைச்சேர்ந்த பார்வதி என்பவரை கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிபோன கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் பார்வதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் முரளிக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அங்கு சென்று பார்வதியின் உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். குடும்ப தகராறு காரணமாக பார்வதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் பார்வதி தூக்குபோட்டு இறந்ததால் ஓசூர் சப்-கலெக்டர் விமல்ராஜ் மற்றும்  அவரது கணவர் முரளி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் சப்-கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், பணிக்கு வந்தாலும் சீக்கிரமாக திரும்பி சென்று விடுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவின்பேரில் சப் கலெக்டர் ரத்னா நேற்று மாலை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்தியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரே ஒரு செவலியர் மட்டும் பணியில் இருந்தார்.

    டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். உள் நோயாளிகளிடம் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் செவிலியரிடம் டாக்டர் எங்கே என கேட்டார். அதற்கு செவிலியர் டாக்டர் ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார் என்று கூறினார். இதனால் சப்-கலெக்டர் ரத்னா ஆஸ்பத்திரி முகப்பில் டாக்ருக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார்.

    அப்போதும் டாக்டர் வராததால் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இது குறித்து சப்-கலெக்டர் ரத்னா மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும், அதன் பின் டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மனைப்பட்டா வழங்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள எஸ்.நரையூர் கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள், சப்-கலெக்டர் பிரசாந்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக எங்கள் பகுதியில் அரசு இடம் ஒதுக்கி உள்ளது. அந்த இடத்தை சில தனிநபர்கள் அதிகாரிகளின் அனுமதியின்றி தங்களது உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இலவச மனைப்பட்டா பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியற்றவர்களுக்கு மனைப்பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். மேலும் உரிய பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×