முக்கூடலில் மரக்கன்று நடும் விழா

விழாவுக்கு சப்-கலெக்டர் ரிசாப் தலைமை தாங்கினார்.தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
விழாவில் சப்-கலெக்டர் ரிசாப் மரக்கன்றுகள் நட்ட காட்சி.
விழாவில் சப்-கலெக்டர் ரிசாப் மரக்கன்றுகள் நட்ட காட்சி.
Published on

முக்கூடல்:

முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் 75-வது சுதந்திர தின பவள விழாவில் சப்-கலெக்டர் ரிசாப் கலந்து கொண்டு, தலைமை தாங்கி முக்கூடல் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நெடுஞ்சாலை ஓரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

விழாவில் தாய் வீடு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆறுமுகம், கோமதி அம்மாள், அனிதா, சுதா, அருள் மற்றும் பொழில் தன்னார்வ இயக்கம், கோமதி அம்மாள் - கலாம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, டீரிம் டிவைனி பவுண்டேசன், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முக்கூடல் நகர வியாபாரிகள் சங்க தலைவர் பூமிபாலக பெருமாள், நாகராஜன், தன்னார்வலர்கள் ஆதிமூலம், பால்துரை, முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின், கிராம நிர்வாக அலுவலர் பொன்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com