என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக எம்.பி"
- டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
- பழைய ரயில் நிலையம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும்
டெல்லியின் பெயரை மாற்றக் கோரி சாந்தினி சவுக் பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரி வருகிறது.
இந்நிலையில் பிரவீன் கண்டேல்வால் தனது கடிதத்தில் டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என மாற்ற வேண்டும் என வலியுத்தியுள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள பழைய ரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்றும் டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்றுவதன் மூலம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தர்மத்தை எதிர்கால சந்ததியினருக்கு கடத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார்
- இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு பாஜக எம்.பி. மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் , "இந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட கடுமையான மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் மிகவும் மோசமானம காயங்களை ஏற்படுத்தியுள்ளன, அவை குணமடைய நீண்ட காலம் எடுக்கும். நேற்று மாலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பயங்கரமான காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
இந்த பேரிடர் நேரத்தில், சவாலான சூழ்நிலைகளிலும் கூட சாலைகளில் இருந்து குப்பைகளை அகற்றும் அனைத்து அதிகாரிகள், NDRF-SDRF பணியாளர்களின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது.
- எனவே அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
- 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்
மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, தேர்தல் பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






