என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் பரப்புரை"
- 2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
- அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
திமுக- பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைத்ததாகக் கூறுவது.
பாஜகவுடன் கூட்டணி தேவையா என நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கின்றனர்.
அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
தவெக, பாசிச பாஜக அரசுடனும், திமுக அரசுடனும் ஒத்துப் போகாது.
திமுகவிற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே.
வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
- நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.
அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:-
லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து அதிக தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான்.
சத்தான உணவு முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
தமிழக என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.
பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல்.
நாமக்கல்லுக்கு அது செய்வோம் இது செய்வோம் என சொன்னார்களே? செய்தார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
- அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
- கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் தவெகவினர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் காலத்தில், கழகத் தோழர்கள் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வீடு வீடாகச் செல்லும் பரப்புரை, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், வடிவமைப்புகள், இலச்சினைகள் அல்லது வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.
முதல்வர் வேட்பாளர் அல்லது கழகத் தலைவர் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளரங்கு, பொதுவெளி மற்றும் பொதுக் கூட்டங்களின் போது, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வெடி வெடிப்பது உள்ளிட்ட அதிகப்படியான கொண்டாட்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சிகளின் போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பொதுமக்களின் உற்ற தோழர்களாகக் கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.
- ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2026ம் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது #DravidianModel அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என திமுக-இல் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்!
களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
- 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்
மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, தேர்தல் பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி மனு.
- டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது.
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீப் பேஃக் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைதானவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட டிரம்ப், வாக்காளர்களிடையே உரையாற்றினார்.
டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டா ஏற்றப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதை ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதுப்படுத்தி இருக்கிறது.
துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்திருப்பதாகவும், சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது டிரம்ப், பேரணியில் கலந்து கொண்ட யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
"கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற போதிலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்று எஃப்.பி.ஐ. மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.






