தேர்தல் பரப்புரையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்.பி - திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்

மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்
தேர்தல் பரப்புரையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்.பி - திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்
Published on

மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, தேர்தல் பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com