என் மலர்

  நீங்கள் தேடியது "minor"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Uttarakhand
  டேராடூன்:

  இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கூடுமான வரையில் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

  ஜார்காண்ட் மாநிலத்தின் பக்தா என்ற கிராமத்தில் வீடு புகுந்து சிறுமியை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்ற 4 பேர், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

  அதோடு நின்றுவிடாத அந்த கொடியவர்கள், அந்த 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Uttarakhand
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடன் பேச மறுத்ததால் தனது காதலியை வீடு புகுந்து கழுத்தை நெறித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். #MadhyaPradesh
  போபால்:

  மத்திய பிரதேச மாநிலம் தில்கவான் கிராமத்தில் வசிக்கும் 22 வயது வாலிபர் அமித் புர்மன். அதே கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.

  இந்நிலையில், நேற்று இரவு அமித்துடன் அந்த சிறுமி செல்போனில் பேச மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது அழைப்புகளை அவர் புறக்கணிக்கவே, சிறுமியின் தங்கையிடம் அமித் தூது அனுப்பியுள்ளார். அப்படியும் அமித்துடன் சிறுமி பேசவில்லை.

  இதனால் ஆத்திரமடைந்த அமித், சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீடு புகுந்து, தாயார் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளார். வெறிபிடித்ததை போல் நடந்துகொண்ட அமித், தன்னுடன் பேச மறுத்த தனது காதலியை கொடூரமாக தாக்கியதுடன், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

  இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கொடூர காதலர் அமித் புர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  அறிவு முதிர்ச்சி இன்றி காதல் போன்ற வாழ்வின் மிக முக்கிய கட்டங்களுக்குள் நுழைந்ததற்கு தண்டனையாக அமித் சிறையிலும், சிறுமி கல்லறையிலும் இருக்கிறார். #MadhyaPradesh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். #MobileKillsYoung
  ஐதாராபாத்:

  வயது பாரபட்சம் இன்றி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் செல்போன் மோகத்தால் சிறுவன் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

  தெலுங்கானா மாநிலம் ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தாகே பிரேமை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்ற கட்டாம் பிரேம் சாகர், நடுவழியில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.  தாகே பிரேம் சுயநினைவை இழந்ததை அடுத்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளார். தனது மகன் மாயமானதாக தாகே பிரேமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை கட்டாம் பிரேம் சாகர் ஒப்புக்கொண்டார்.

  மேலும், தமக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைக்க தாகே பிரேமின் செல்போனை எடுக்கவே அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  செல்போன் மோகத்தால் வாழ்வை இழந்த வாலிபர் மீது கொலை, ஆள்கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MobileKillsYoung
  ×