என் மலர்
நீங்கள் தேடியது "Madhyapradesh"
- பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள்.
- நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது.
வாக்கு திருட்டு குறித்து பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பலமுறை குற்றம்சாட்டி இருந்தார்.
மக்களவை தேர்தல் மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக கூறி இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியானா சட்டசபை தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்ததாக தெரிவித்தார்.
இந்தநிலையில் அரியானாவை போல மத்தியபிரதேசம், சத்தீஸ்கரிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக ராகுல்காந்தி இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அவர் நேற்று மத்தியபிரதேசம் சென்றார்.
இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நான் அரியானா குறித்து ஒரு விளக்க காட்சியை வழங்கினேன். வாக்கு திருட்டு நடப்பதை நான் தெளிவாக கண்டேன். 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 8 வாக்குகளில் ஒரு ஓட்டு திருடப்பட்டது.
அதைத்தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக நான் நம்புகிறேன்.
பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.
இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.
வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
- குழந்தைகளுக்கு ஒரு மரியாதைக்கு தட்டு கூட கிடைக்கவில்லை.
- 20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவை காகிதத்தில் வைத்து வழங்கிய வீடியோவை பார்த்து இதயம் நொறுங்கி போனதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நான் இன்று மத்தியப் பிரதேசம் செல்கிறேன். மேலும், அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்படுகிறது என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்த்ததிலிருந்து, என் இதயம் உடைந்து போயுள்ளது.
நாட்டின் எதிர்காலம் தங்கள் கனவுகளில் தங்கியிருக்கும் அதே அப்பாவி குழந்தைகள் இவர்கள்தான், அவர்களுக்கு ஒரு மரியாதைத் தட்டு கூட கிடைக்காது.
20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன. அவர்களின் 'வளர்ச்சி' வெறும் மாயை, ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான ரகசியம் 'முறைமை'.
நாட்டின் குழந்தைகளை, இந்தியாவின் எதிர்காலத்தை, இவ்வளவு மோசமான நிலையில் வளர்க்கும் முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு அவமானம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

பாகிஸ்தானில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்ட தக்காளியை அவர்கள் குறைந்த விலையில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றனர். #PulwamaAttack
மத்தியபிரதேச மாநிலத்தின் ஹோஷங்காபாத்தில் உள்ள ஆனந்த நகர் பகுதியைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் சுனீல் மந்த்ரி (56). இவர் அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். மந்த்ரியின் மனைவி வீட்டில் துணிக்கடை நடத்தி வந்தார். அவரது மறைவிற்கு பின் டிரைவர் வீரேந்திர பச்சோரி(30)யின் மனைவி கடையை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து டிரைவரின் மனைவிக்கும் டாக்டருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தன் மனைவியுடன் டாக்டருக்கு தகாத உறவு இருப்பதாக டிரைவர் சந்தேகித்துள்ளார். தன் மனைவியிடம் இருந்து விலகி விடுமாறு பலமுறை கூறியுள்ளார். இதனை கேட்காத டாக்டர், டிரைவரை சமாதானம் செய்யும் பொருட்டு அவருக்கு சம்பளத்தை உயர்த்தி, ரூ.16000 சம்பளம் வழங்கியுள்ளார். இருப்பினும் டிரைவர் சமாதானமாகவில்லை. இதன்காரணமாக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை டிரைவர், பல்லில் வலி இருப்பதாக டாக்டர் மந்த்ரியிடம் கூறியுள்ளார். சிகிச்சை அளிப்பதாகக் கூறி இரவு 9 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யும் கத்தியினைக் கொண்டு பல முறை கழுத்தில் கீறியுள்ளார். பின்னர் வீட்டின் பாத்ரூமில் வைத்து பல நூறு துண்டுகளாக நள்ளிரவு 1 மணிவரை நறுக்கியுள்ளார்.
மந்த்ரியின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது டாக்டர் பதற்றத்துடன் காணப்பட்டார். வீட்டின் படிகளில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், அவர் பல நாட்களாக திட்டமிட்டு டிரைவரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தடயங்களை அழிப்பதற்காக, டிரைவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றில் சில துண்டுகளை ஆசிட்டில் கரைத்தாகவும், உடைகளை சாலையில் வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் பாத்ரூமில் இருந்து பல பெரிய உடல் பாகங்கள் மற்றும் சிறிய துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Madhyapradesh #Doctorarrested



மத்திய பிரதேச மாநிலம் தில்கவான் கிராமத்தில் வசிக்கும் 22 வயது வாலிபர் அமித் புர்மன். அதே கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அமித்துடன் அந்த சிறுமி செல்போனில் பேச மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது அழைப்புகளை அவர் புறக்கணிக்கவே, சிறுமியின் தங்கையிடம் அமித் தூது அனுப்பியுள்ளார். அப்படியும் அமித்துடன் சிறுமி பேசவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமித், சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீடு புகுந்து, தாயார் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளார். வெறிபிடித்ததை போல் நடந்துகொண்ட அமித், தன்னுடன் பேச மறுத்த தனது காதலியை கொடூரமாக தாக்கியதுடன், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கொடூர காதலர் அமித் புர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறிவு முதிர்ச்சி இன்றி காதல் போன்ற வாழ்வின் மிக முக்கிய கட்டங்களுக்குள் நுழைந்ததற்கு தண்டனையாக அமித் சிறையிலும், சிறுமி கல்லறையிலும் இருக்கிறார். #MadhyaPradesh
மத்தியபிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய்.
சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்து விட்டது. அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.
இதுதொடர்பாக ராஜேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும்படி கூறினார்கள்.
ஆனால், உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல போலீசார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை.
இதனால் வேறு வழியில்லாமல் குன்வார்பாய் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார்.
அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.
சிலர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து இணைய தளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அபிஜித் அகர்வால் கூறும்போது, 108 ஆம்புலன்சுக்கு அவர் தகவல் கொடுத்திருந்தால் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்து இருப்போம்.
அது போன்ற எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனாலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் பணம் கொடுத்து வாகன வசதி செய்ய வழி இல்லாததால் தொழிலாளி ஒருவர் இறந்த தனது மனைவியின் உடலை பல கி.மீட்டர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது.
இதேபோல் வாகன வசதி கிடைக்காமல் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் பிணத்தை ஏற்றி செல்லும் அவலநிலை பல மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.






