என் மலர்
செய்திகள்

ம.பி.யில் முதல் மந்திரி சென்ற வாகனம் மீது கல்வீச்சு
மத்தியப்பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிதி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பாதுகாப்பு படையினர் சூழ ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சர்ஹட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் கார் மீது கல்லை வீசினர். இதில் முதல் மந்திரி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து மாநில பாஜகவினர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் தொகுதியில் முதல் மந்திரியை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்தனர். ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிர்க் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
Next Story






