என் மலர்
செய்திகள்

செல்போனில் பேச மறுத்ததால் காதலியை வீடு புகுந்து கொன்ற காதலன்
மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடன் பேச மறுத்ததால் தனது காதலியை வீடு புகுந்து கழுத்தை நெறித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். #MadhyaPradesh
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் தில்கவான் கிராமத்தில் வசிக்கும் 22 வயது வாலிபர் அமித் புர்மன். அதே கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அமித்துடன் அந்த சிறுமி செல்போனில் பேச மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது அழைப்புகளை அவர் புறக்கணிக்கவே, சிறுமியின் தங்கையிடம் அமித் தூது அனுப்பியுள்ளார். அப்படியும் அமித்துடன் சிறுமி பேசவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமித், சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீடு புகுந்து, தாயார் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளார். வெறிபிடித்ததை போல் நடந்துகொண்ட அமித், தன்னுடன் பேச மறுத்த தனது காதலியை கொடூரமாக தாக்கியதுடன், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கொடூர காதலர் அமித் புர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறிவு முதிர்ச்சி இன்றி காதல் போன்ற வாழ்வின் மிக முக்கிய கட்டங்களுக்குள் நுழைந்ததற்கு தண்டனையாக அமித் சிறையிலும், சிறுமி கல்லறையிலும் இருக்கிறார். #MadhyaPradesh

Next Story