search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chilli"

    • பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
    • கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    உடுமலை :

    கத்தரி,மிளகாய் நாற்று தேவைப்படும் உடுமலை வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், விவசாயிகளுக்கு தேவையான கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சிங்காரவேல் 95247-27052, சித்தேஸ்வரன் 88836-10449, காயத்ரி 63790-62232, ராஜ்மோகன் 95854-24502 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து பச்சை மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காது.
    • சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அறுவடைப்பணிகளை திட்டமிட்டு மதிப்பு கூட்டுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்களை பின்பற்றி காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.இதில் பச்சை மிளகாய், பாப்பனூத்து, குட்டியகவுண்டனூர், ஆண்டியகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் சாகுபடியாகிறது.இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து பச்சை மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காது.எனவே சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அறுவடைப்பணிகளை திட்டமிட்டு மதிப்பு கூட்டுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    மிளகாய் சாகுபடியில் ெஹக்டேருக்கு 13 மெட்ரிக்., டன் வரை விளைச்சல் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். விலை வீழ்ச்சியின் போது பச்சை மிளகாயை செடியிலேயே பழுக்க விட்டு பின்னர் அறுவடை செய்கின்றனர்.இதில் விதைத்தேவைக்கு குறிப்பிட்ட சதவீதத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும் உலர்களங்களில் காய வைத்து வற்றல் மிளகாயாகவும் விற்பனை செய்கிறார்கள்.

    செடியிலேயே மிளகாயை காய விடுவதால்அவற்றின் எடை வெகுவாக குறைந்து ெஹக்டேருக்கு 3 மெட்ரிக்., டன் வற்றல் மிளகாய் கிடைக்கிறது.பச்சை மிளகாயை விட, வற்றலுக்கு அதிக விலை கிடைப்பதால் உடுமலைப்பகுதி விவசாயிகள் கிராம உலர்களங்களில், வற்றலை காய வைத்து தரம் பிரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வற்றல் மிளகாய்க்கு உள்ளூர் மற்றும் பிற மாவட்ட சந்தைகளில் ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. எனவே இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். கிராமம்தோறும் உலர் களங்கள் அமைத்து கொடுத்தால், இத்தகைய மதிப்பு கூட்டு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்றனர்.

    காங்கிரஸ் தலைவரான ராகுலுக்கு மிளகாய் எப்படி வயல்வெளிகளில் விளைகிறது என தெரியுமா? என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள நர்சிங்கர்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் தலைநகரான போபாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவர் 15 கிலோ மீட்டருக்கு சாலை வழியாக சென்று மக்களை சந்தித்துள்ளார். 

    ஆனால், அவருக்கு வயல்வெளிகளில் மிளகாய் மேல்புறமாகவா அல்லது கீழாகவா எப்படி விளைகின்றது என தெரியுமா? 
    விவசாயம் பற்றி தெரியாதவர் அதை பற்றி அக்கறை கொள்ளலாமா?

    ராகுல்ஜி உங்கள் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு அதிகமாக 18 சதவீத வட்டியுடன் லோன்களை வழங்கி உள்ளீர்கள். நாங்களோ பூஜ்ய சதவீதத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
    ×