என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Assembly Election"
- காங்கிரஸ் உட்கட்சி பூசலை நிறைவுக்கு கொண்டு வந்து வெற்றி கண்டார், சுனில்
- இருமுனை போட்டி மட்டுமே இருக்கும் வகையில் களத்தை தெளிவாக்கினார்
தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற ஆலோசனைகளை கூறி, வியூகம் அமைத்து தரும் பணியை தனியார் அமைப்புகள் செய்து வருவதை கடந்த சில வருடங்களாகவே இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.
இதில் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகொலு ஆகியோர் பிரபலமானவர்கள்.
கடந்த வருடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார் சுனில் கனுகொலு (Sunil Kanugolu). கடந்த மே மாதம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து அதன் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இதை தொடர்ந்து சுனில், தெலுங்கானாவில் கவனம் செலுத்தினார்.
தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியிருந்தது.
காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையின்றி பல தலைவர்களின் கீழ் பல குழுக்கள் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன. முதல் வேலையாக கட்சிக்குள் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என கட்சி தலைமையிடம் எடுத்து கூறி அந்த முயற்சியில் வெற்றி கண்டார் சுனில்.
சுனிலை முடக்கும் வகையில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும், அப்போதைய முதல்வருமான கே.சி.ஆர்., சுனிலை காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கினார். சுனிலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரது அலுவலக பொருட்கள் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், இதில் அச்சமடையாத சுனில், புதிய அலுவலகம் ஒன்றை அமைத்து மீண்டும் மன உறுதியுடன் காங்கிரஸ் வெற்றி பெற செயல்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்க கூடிய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், தன்னை எங்குமே முன்னிறுத்தி கொள்ள விரும்பாதவரான சுனில், ஊடகங்களை அறவே தவிர்ப்பவர்.
பா.ஜ.க.விற்கு செல்ல கூடிய வாக்குகளால் கே.சி.ஆர். மீண்டும் பதவியில் அமர முடியும் என முதலிலேயே கணித்து அதை தகர்க்க துல்லியமாக திட்டமிட்டார். தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் தாக்கத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பிரசாரத்திற்கும் திட்டமிட்டு தந்தார்.
தன்னை கைது செய்ய உத்தரவிட்டிருந்த கே.சி.ஆர். மீது கோபத்தில் இருந்த ஒய்.எஸ்.ஆர். மகள் ஒய்.எஸ். ஷர்மிளா தேர்தலில் போட்டியிடாமல் நின்றால் ஓட்டு பிரிவை தடுக்க முடியும் என புரிய வைத்து அந்த முயற்சியில் வெற்றி பெற்றார்.
அதே போன்று தெலுகு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தலில் நிற்பதையும் சாதுர்யமாக பேச்சு நடத்தி தடுத்தார்.

இதனால், 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். என் இருமுனை போட்டி மட்டுமே நடைபெறும் வகையில் களத்தை தெளிவாக்கினார்.
சுனில் கனுகொலு கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியின் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் வளர்ந்தவரான சுனில் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்.
நிர்வாக மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற மெக்கின்சே (McKinsey) நிறுவனத்தில் பணியாற்றியவர்.
இந்தியா திரும்பிய சுனில் அசோசியேஷன் ஆஃப் பில்லியன் மைண்ட்ஸ் (ABM) எனும் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் வகுத்து தரும் நிறுவனத்தை தொடங்கி பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர்.
கல்வகுன்ட்லா சந்திரசேகர் ராவ் (KCR) வகுத்த வியூகங்கள், கனுகொலு சுனில் வியூகங்கள் முன் எடுபடாமல் தோற்றதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்
தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
இதையடுத்து வருகின்ற 3-ந் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறியுள்ளன.
காங்கிரஸ் கட்சி 60 முதல் 79 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெற்றி பெற வேண்டும்.
தெலுங்கானா தேர்தல் தங்களுக்கு சாதகமாகாமல் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதி ஒன்றில் வைத்து பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் நவீன வசதிகள் கொண்ட சொகுசு விடுதியை தயார் செய்து வைத்துள்ளதாம்.
தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், தெலுங்கானா பகுதியில் இருந்து வெற்றி பெறும் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திர சேகர ராவ் கட்சிக்கு தாவுவதை தடுக்கவும், குதிரை பேரத்துக்கான முயற்சிகளையும் முறியடிக்கவும் காங்கிரஸ் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
- பலத்த பாதுகாப்பை மீறி தபால் வாக்கு பெட்டியை திறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போலீசார், பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எந்திரம் இருக்கும் மையத்தை யாரும் எளிதாக நெருங்கி விட முடியாது. உயர் அதிகாரிகள் இல்லாமல் திறக்க முடியாது.
மத்திய பிரதேசத்தில் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், வருகிற 3-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனால் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினரும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாட்டுகளையும் மீறி, பாலகாட் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு பெட்டி வைத்திருக்கும் அறையில் பலர் தபால் வாக்குகளை கட்டு கட்டுகளாக பிரித்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பானது.
இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், "இது மிகவும் முக்கியமான விசயம். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேணடும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன்பின் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஜோதிராதித்யா சந்தியா 20 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.
- உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
- வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.
பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.
ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.
அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.
வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.
- ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
- தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.
தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.
தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.
பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.
ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
- தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.பி.எஸ். தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என தர்மர் எம்.பி பேசினார்.
- இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாத புரம் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்தின் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மூக்கையா, மாநில வழக் கறிஞர் பிரிவு செயலாளர் நவநாதன் முன்னிலை வகித்தனர்.
முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துச் சாமி வரவேற்றார். கூட்டத் தில் தர்மர் எம்.பி.பேசிய தாவது:-
நமது ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ். செயல்பாடு களை தமிழகமே உற்று நோக்கி கவனிக்கிறது. திருச்சி மாநாடு இந்திய ளவில் பேசப்பகிறது. பசும்பொன் தேவர் குருபூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுக்க வேணடும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். நம் உழைப்பு என்றும் வீணாவதில்லை. உழைப்புக்கேற்றபலன் கிடைக்கும். நடிப்பவர் களைப் பற்றி நாம் கவலைப்பட தேவை யில்லை. நமது நிர்வாகிகள் யாரும் சோடை போன தில்லை. நமது நிர்வாகிகளை மக்களே பாராட்டுகின்றனர்.
இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது. அதற்காக தொடர்ந்து உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பரமக்குடி திலகர், மாரந்தை நீதி தேவன், தூரிமுருகேசன் உள்பட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
- மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனுதாக்கல் கடந்த 13-ந்தேதி நடந்தது. இந்நிலையில் இன்று அந்த மாநிலத்தில் 2-வது கட்ட 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.
அதுபோல மத்திய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மனுதாக்கல் தொடங்கியது. அந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இன்று வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.
- 2024 தேர்தலில் பா.ஜ.க.விற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது
- பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்
இந்திய தலைநகர் புது டெல்லியில் 'பிரதிதின் மீடியா நெட்வொர்க்' எனும் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வரும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ள முக்கிய தலைவருமான ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:
தெலுங்கானாவில் அனேகமாக வெற்றி பெறுவோம். மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் வெற்றி உறுதி. ராஜஸ்தான் மாநிலத்தில் நெருக்கமான போட்டியில் இருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கிறது. நாங்கள் கர்நாடகா தேர்தலில் முக்கிய பாடம் கற்று கொண்டோம். அதாவது, பா.ஜ.க., தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் கவனத்தை சிதறடிக்க செய்கிறது. கர்நாடகாவில் அதனை உணர்ந்த நாங்கள் எங்கள் கவனத்தை சிதற விடாமல் மக்கள் பிரச்சனையிலேயே கவனம் செலுத்தி வந்தோம். அதனால் பெரும் வெற்றி பெற்றோம். இதை உணர்ந்து கொண்ட நாங்கள் இதனை எதிர் கொள்ள கற்று கொண்டு விட்டோம். தற்போது கூட சாதி கணக்கீடு குறித்து பேச விடாமல் கவனத்தை திசை திருப்பி வருகிறார்கள். 'ஓரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் கூட இந்தியாவின் தலையாய பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை, தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை சிதறடிக்கத்தான் கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு பெரும் வியாபார நிறுவனங்கள் நன்கொடை அளிப்பதில்லை. எங்களுக்கு அவர்கள் உதவினால் என்னவாகும் என அவர்களையே கேளுங்கள்.
இவ்வாறு ராகுல் கூறினார்.
- திரிபுராவில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது
- மேகாலயாவின் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுடெல்லி:
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.
60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது.
வாக்குகள் இன்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி. ஒரு தொகுதியில் வென்றது. திப்ரா மோதா கட்சி 13 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பிடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் பாஜக- தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக-என்டிபிபி கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 12 தொகுதிகளிலும், என்டிபிபி 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ்-7, தேசிய மக்கள் கட்சி-5, நாகா மக்கள் முன்னணி-2, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்)-2, ஐக்கிய ஜனதா தளம்-1 மற்றும் சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நாகாலந்தின் தற்போதைய முதல்-மந்திரி ரியோ அங்காமி 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
மேகாலயாவின் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிகபட்சமாக 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மக்களின் குரல் கட்சி 4 தொகுதிகளிலும், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி தலா 2 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு யாருக்கும் பெரும்பான்மைக்கு கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள என்பிபி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது.