என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Whistle"

    • விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.

    தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, அம்மாநிலத்திற்கென புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.

    இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு

    1. திரு. A. சையத் முகமது காசிம்

    2. திரு.K.புதியவன்

    3. திரு. V.சாமிநாதன் Ex MLA

    4. திரு. K.A.U.அசனா Ex. MLA

    5. திரு. பெரியசாமி Ex.MLA

    6. திரு. VJ.சந்திரன் Ril, 10,

    7. திரு. AG.வலந்தன

    8. திரு. R. நிரேஷ் குமார்

    9. திரு. V.ராமு

    10. திரு. N.மணிபாலன்

    11. திரு. V.பிரதீபன்

    12. திரு.S.பிரபு

    13. திரு. 5.ராஜசேகர்

    14. திரு. N.சந்திரசேகரன்

    15. திருமதி. M.K.சத்யா

    16. திரு. K.செந்தில் குமார்

    17. திரு. N.வசந்தராஜா

    18. திரு. M.சரவணன்

    19. திரு. A.சந்திரபாலன்

    20. திரு. B.யூசப்

    21. திரு. P.வேல்முருகன்

    22. திரு. N.விஜி

    23. திரு. T.சுகுமார்

    24. திரு. K.பாரதிதாசன்

    25. திரு.S.பிரான்சிஸ்

    26. திரு. 1.கிளார் பேட்ரிக்

    27. திரு. M.மணிகண்டன்

    28. திரு. G.குமரவேல்

    29. திரு. B.பாலாசுதாகர்

    30. திரு. M.பிரிஜேஷ்

    எனது உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழக நிர்வாகிகள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    விஜய்யின் ரசிகர்களுக்காகவும், மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதாலும், 'விசில்' சின்னம் தவெகவின் முதன்மைத் தேர்வாக அமைந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    • சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    • இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

    இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "இன்றைக்கு சேப்பாக்கத்தில விசிலுக்கு தடை பண்ணுவாங்க. நாளைக்கு கண்டக்டருக்கு விசிலுக்கு பதிலா வேற கொடுப்பாங்க... அப்பறமா போலீஸ்கிட்ட இருந்து விசில் எல்லாம் பிடுங்கிவாங்க... ஆனா எங்க பசங்க விசில் இல்லாம கையாலே விசில் அடிப்பாங்க" என்று தெரிவித்தார். 

    • முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்தது.
    • தவெக தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன.

    ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

    இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 

    • பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
    • மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்களிடம் இருந்து "விசில்" பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது. சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் "விசில்" சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதி விஜய்யின் ஆட்சி நடக்கும்..!" என பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாதது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் (TNCA) விளக்கம் அளித்தது. அதன்படி, "சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்டதற்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசிலுக்கு தடை என்ற தகவலை மட்டும் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்," என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    • பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
    • மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

    சேப்பாக்கம் மைதானத்திற்குள் "விசில்" எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது. சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாதது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் (TNCA) விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, "சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்டதற்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசிலுக்கு தடை என்ற தகவலை மட்டும் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்," என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

    • பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
    • மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

    சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் "விசில்" எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ தரப்பில் விசிலுக்கு தடை குறித்த அதிகாரப்பூர்வ விதிமுறை எதுவும் இல்லை. எனினும், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல் துறை மற்றும் மைதான நிர்வாகம் தரர்பில் இப்படி தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.
    • தவெக நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும். வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியது பரபரப்பி ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தொடர்ந்து தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.

    அப்போது பேசிய செங்கோட்டையன், "விசில் அடிச்சிட்டு போகட்டும் விடுங்க... ஒன்னும் பண்ண முடியாது போயிடலாம் வாங்க... விசில் அடிக்கிறதை நிறுத்த மாட்டாங்க... என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    "அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு புதிய முகத்தை, எதிர் கால தமிழ்நாட்டை ஆளப் போகிற தமிழக வெற்றிக் கழக தலைவருடன் இணைந்து இந்த பணிகளை ஆற்றுகிற நல்ல வாய்ப்பை எனக்கு தந்து இருக்கிறார்கள். இங்கு எல்லோர் கையிலும் விசில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நாளை காவல்துறை கூட விசிலை வைக்க முடியாத சூழல் ஏற்படும்.

    அதை போலத்தான் பஸ்சில் பயணம் செய்கின்ற போது கண்டக்டர் விசில் அடிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகும். விஜய் திரைப்படத்தில் ஹீரோ அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தினுடைய ஹீரோ என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு ஆளுக்கு 1000 ரூபாய். தொலை தூரத்திலே தாய்மார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் பேசியவர்கள் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று குரல் கொடுத்தார்கள். ஒருவரும் கை தட்டவில்லை.

    ஆனால் தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி நம்முடைய தலைவர்தான். 10 கூட்டணி, 8 கூட்டணி ஆகியவற்றை தூள் தூளாக்குகிற சக்தி த.வெ.க. தலைவராக மட்டுமல்ல எதிர்கால தமிழ்நாட்டை ஆளப் போகிற நம்முடைய விஜய்க்குதான் உண்டு. நான் பல தலைவர்களை பார்த்து இருக்கிறேன். புரட்சித் தலைவரை பார்த்தேன். அப்போது 26 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினர். அப்போது உங்களை போலத்தான் நானும் இருந்தேன்.


    இந்திய வரலாற்றில் யாருக்கும் இல்லாத புகழ் விஜய்க்கு இருக்கிறது. ரூ.1000 கோடி வருவாயை வேண்டாம் என்று கூறி விட்டு மக்களை காப்பதற்காக ஒரு தலைவர் இங்கு வந்திருக்கிறார் என்று சொன்னால் இந்த தலைவரின், ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வையை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு எந்த வீட்டை எடுத்துக் கொண்டாலும் விஜய்க்குதான் ஓட்டு உள்ளது.

    கேட்காமல் கொடுக்கக்கூடிய ஒரு தலைவர் தமிழ்நாட்டில் தோன்றப் போகிறார். அவர் முதல்-அமைச்சராக வரப்போகிறார். அந்த வரலாறு படைக்கப்படும். 10 கட்சிகளின் கூட்டணியை அசைத்து விட முடியுமா? என்று நினைக்கிறார்கள். எல்லோரும் ஆடிப்போய் நிற்கிறார்கள். ஏனென்றால் அந்த இரு கட்சிகளிலும் இருக்கின்ற தலைவர்கள் தலைவர்களே அல்ல. தலைமை என்பது வேறு. இன்று இருக்கிற தலைமை ஆடிப் போய் இருக்கிறது.

    இவரை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆக்குவோம் என்று மக்கள் சூளுரை ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்தக்கூடிய ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வை, மனித நேயம் ஆகியவற்றுடன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை தமிழகத்தில் உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் விஜய் மட்டும்தான். எந்த சக்தியாலும் தமிழ்நாட்டில் இனி விஜய்யை தடுத்து நிறுத்த முடியாது. அவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது. நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும்.

    வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இங்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கூடுகிற கூட்டத்தை பார்க்கும் போது நம்மை வெல்வதற்கு எந்த சக்தியும் இனி தமிழ்நாட்டில் இல்லை என்று வரலாறு படைக்கின்ற காலம் அமையும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • 'விசில்' சின்னம் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்று கூறப்படுகிறது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 'விசில்' சின்னம் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ""உடனே எங்களுக்கு விசில் தேவையில்லை. எங்களிடம் உள்ள குக்கரிலேயே விசில் உள்ளது" என்று தவெகவின் விசில் சின்னதை கிண்டல் செய்து பேசினார்.

    • தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
    • மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில்

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மீண்டும் 'பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அதில்,  

    "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

    தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.

    தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

    நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம். " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

    எந்தக்கட்சிக்கும் இல்லாத அளவுக்கு நிர்வாக ரீதியாக 128 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை த.வெ.க. அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அதேபோல், வார்டு பகுதி செயலாளர்களையும் நியமித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.விற்கு இணையான நிர்வாக கட்டமைப்பை த.வெ.க. உருவாகி வருகிறது. 

    இந்நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. த.வெ.க. ஒரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக 'பொதுச் சின்னம்' கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. 

    கட்சித் தலைமை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சுமார் 10 விருப்பச் சின்னங்கள் வழங்கப்பட்டிருந்தது. அதில் விசில், ஆட்டோ, மட்டைப்பந்து , மடிக்கணினி, கப்பல், மைக்ரோஃபோன் போன்றவை முக்கியமாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதில் தவெக தரப்பில் விசில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

    விஜய்யின் ரசிகர்களுக்காகவும், மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதாலும், 'விசில்' சின்னம் தவெகவின் முதன்மைத் தேர்வாக அமைந்ததாக கூறப்படுகிறது. 

    ×