

திருச்சி கிழக்கு தொகுதியில் பேட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் அங்கு பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருச்சி மரக்கடை பகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை விஜய் முன்வைத்தார்.
திமுக- பாஜக என இருவரையும் நம்பாதீர்கள் என்றும்.. நான் பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்.. 100 சதவீதம் என்னை நீங்கள் நம்பலாம் என கூறினார்.
மேலும், வரும் 23ம் தேதி அன்று காலையில் பக்காவா ரெடி ஆகி, வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு பூத்திற்கு சென்று விசில் சின்னத்தின் பட்டனில் ஒரு அழுத்து அழுத்துங்கள் என்று வாக்காளர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
பிரச்சாரத்தின்போது விஜய் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர்,""நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு... கொஞ்சம் நவுந்தேன்னா இங்க 8 கோடி பேரு.. மெரள போகுது ஸ்டேட்டு, விசிலு சத்தம் கேட்டு.." என்று தவெக பரப்புரை பாடலை விஜய் பாடினார்.
இதனால், தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.