சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்திய இளைஞருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

ஜுமர் என்ற இளைஞர், சிறுமி ஒருவரை 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக பின்தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்திய இளைஞருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
Published on

கர்நாடகாவில் பள்ளி செல்லும் சிறுமியை தொடர்ந்து பின்தொடர்ந்து துன்புறுத்திய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு மாவட்டத்தில் ஜுமர் என்ற 24 வயது இளைஞர், சிறுமி ஒருவரை 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக பின்தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த சிறுமி வகுப்புகளுக்கு செல்வதையே புறக்கணித்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜுமருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com