என் மலர்
நீங்கள் தேடியது "Pragya Singh Thakur"
- 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறினார்.
- காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி.
2008, செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
காவலில் சித்திரவதை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், நரேந்திர மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களின் பெயர்களை வெளியிடுமாறு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மும்பையில் முதல் முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், அப்போதைய விசாரணை அதிகாரிகளின் நடத்தையை கடுமையாக விமர்சித்தார்.
"உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர்கள் ராம் மாதவ் மற்றும் இந்திரேஷ் குமார் போன்றவர்களின் பெயர்களை வெளியிட அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினர்.
நான் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தினால், சித்திரவதை நின்றுவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால் நான் பொய் சொல்ல மறுத்துவிட்டேன்" என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.
இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகவும், ஆதாரமற்றது என்றும், 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், இந்த அட்டூழியங்களுக்கு முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்வீர் சிங் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "காவல்துறையினர் செலுத்திய சித்திரவதையால் என் நுரையீரல் கிழிந்துவிட்டது. அவர்கள் செய்த அட்டூழியங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று அவர் கூறினார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதை 'காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி' என்று பிரக்யா தாக்கூர் விவரித்தது குறிப்பிடத்தக்கது.
- நான் அந்த உத்தரவுகளைப் பின்பற்றாததால் என் மீது போலி வழக்கு பதியப்பட்டது/
- அது எனது 40 ஆண்டுகால வாழ்க்கையை அழித்துவிட்டது.
2008, செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆரம்பத்தில் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) இந்த வழக்கை விசாரித்தது, பின்னர் 2011-ல் NIA -க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 குற்றவாளிகள் நேற்று NIA சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து காவி பயங்கரவாதம் என்று ஒன்று கிடையாது என்றும் அதை உருவாக்கியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கைது செய்ய தனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையின் (ATS) முன்னாள் அதிகாரி மெஹிபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை வரவேற்று அவர் கூறியதாவது, "நான் அப்போது ATS என்ன விசாரணை செய்தது, ஏன் செய்தது என்று சொல்ல முடியாது. ஆனால், ராம் கல்சங்ரா, சந்தீப் தாங்கே, திலீப் பட்டிதார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் போன்ற ஆளுமைகள் குறித்து எனக்கு சில ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மோகன் பகவத் போன்ற ஒரு உயர்ந்த ஆளுமையை கைது செய்வது என் சக்திக்கு அப்பாற்பட்டது. நான் அந்த உத்தரவுகளைப் பின்பற்றாததால், என் மீது ஒரு தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டது, அது எனது 40 ஆண்டுகால வாழ்க்கையை அழித்துவிட்டது " என்று தெரிவித்தார்.
"காவி பயங்கரவாதம் என்று எதுவும் இல்லை. அனைத்தும் போலியானது" என்றும் குறிப்பிட்ட அவர் தனது கூற்றுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் முஜாவர் தெரிவித்தார்.
- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டதை பாஜக வரவேற்றுள்ளது.
- மோடியின் எழுச்சியைத் தடுக்கவும், முஸ்லிம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவும் உருவாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவில் 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டதை பாஜக வரவேற்றுள்ளது.
முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் உள்ளிட்டோருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என கூறி NIA நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் ரவி சங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது "இந்து பயங்கரவாதம்" என்ற கோட்பாட்டை மோடியின் எழுச்சியைத் தடுக்கவும், முஸ்லிம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவும் உருவாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி 2010 இல் அமெரிக்க தூதரிடம், தீவிர இந்து குழுக்கள் லஷ்கர்-இ-தொய்பாவை விட ஆபத்தானவை என்று கூறியதாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான தகவலை ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டினார்.
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கர்னல் பிரசாத் புரோஹித், பிரக்யா தாக்கூர் 17 ஆண்டுகளாக பொய் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ரவி பிரசாத் வலியுறுத்தினார்.
- குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.
- மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர். அவர்கள் தங்கள் மதத்திற்காக குறிவைக்கப்பட்டனர். வேண்டுமென்றே மோசமான வழக்கு விசாரணையே விடுதலைக்குக் காரணம்.
குண்டுவெடிப்பு நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது. மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு மோடி மற்றும் பட்னாவிஸ் அரசாங்கங்கள் விரைவாகக் கோரியதைப் போல இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யுமா?
மகாராஷ்டிராவின் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இதை வலியறுத்துமா? 6 பேரைக் கொன்றது யார்?
2016 ஆம் ஆண்டில், வழக்கில் அப்போதைய வழக்கறிஞர் ரோகிணி சாலியன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மென்மையாக நடந்து கொள்ளுமாறு NIA தன்னிடம் கேட்டதாகக் கூறியதை நினைவில் கொள்க.
2017 ஆம் ஆண்டில், NIA, பிரக்யாவை விடுதலை செய்ய முயற்சித்தது என்பதை நினைவில் கொள்க. அதே பிரக்யா 2019 ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக மாறினார்.
மாலேகானில் நடந்த சதித்திட்டத்தை கர்கரே கண்டுபிடித்தார். துரதிர்ஷ்டவசமாக 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவரை சபித்ததாகவும், அவரது மரணம் அவரது சாபத்தின் விளைவாகும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.
தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் தங்கள் தவறான விசாரணைக்கு பொறுப்பேற்பார்களா? பதில் நமக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
- சம உயரம் கொண்ட எதிரியுடன் போர் நடத்தப்படுகிறது என்றார் பா.ஜ.க. தலைவர்.
போபால்:
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முன்னாள் எம்பியான பிரக்ஞா சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் இந்தியாவுடன் அளவு மற்றும் ராணுவ பலத்தில் பொருந்தவில்லை. சம உயரம் கொண்ட எதிரியுடன் போர் நடத்தப்படுகிறது.
பாகிஸ்தானின் வெடிமருந்துகளும் பயங்கரவாதிகளும் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஏவிய அனைத்து ஆயுதங்களும் இந்திய எல்லைக்கு வெளியே அழிக்கப்பட்டன. அவர்களால் ஒரு தாக்குதலைக் கூட நடத்த முடியவில்லை, இந்தியா அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.
நீங்கள் ஏன் போரை நிறுத்தினீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்? போர் சமமானவர்களுக்கு இடையே நடைபெறுவது. யானை ஒருபோதும் நாயுடன் சண்டையிடாது என தெரிவித்தார்.
- லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள்.
- நம் வீட்டிற்குள் புகுந்து யாராவது தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை.
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற இந்து வேதிகா அமைப்பின் தென் மண்டல மாநாட்டில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தங்களை தாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது. அவர்கள் எதுவும் கிடைக்காவிட்டால் லவ் ஜிஹாத் செய்வார்கள். காதலித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாங்கள் கடவுளை நேசிக்கிறோம். கடவுளை நேசிக்கும் ஒரு சன்யாசி கூறுகிறார், கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகில், தவறு செய்பவர்கள், பாவிகள் அனைவரையும் அழித்து விடுங்கள்,லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள். உங்கள் பெண்களைப் பாதுகாக்க சரியான முறையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் காய்கறிகளை வெட்டப் பயன்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போது என்ன நிலை வரும் என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. நம் வீட்டிற்குள் யாராவது புகுந்து தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை. கத்திகள் காய்கறிகளை வெட்டுவது போல், வாயையும் தலையையும் வெட்டுகிறது.
மிஷனரிகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதை நிறுத்துங்கள். அப்படி அனுப்புவதன் மூலம், முதியோர் இல்லங்களின் கதவுகளை உங்களுக்காக நீங்கள் திறக்கிறீர்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள். அவர்கள் வளர்ந்து சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
- மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
- உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
- மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
- உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா, உடல்நலக் குறைவாக இருப்பதால், ஓய்வு தேவை என என்.ஐ.ஏ தாக்கல் செய்த பதிலை ஏற்காத சிறப்பு நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

பிரக்யா சிங், பிரசாரத்தின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேயின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்றும் கூறினார். இத்தகைய பேச்சுகளால், பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்ட அசம்கான், தனது எதிரணி வேட்பாளரான நடிகை ஜெயபிரதா குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையை உண்டாக்கினார். அவர் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம் பெகுசாரையில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் 4 லட்சத்து 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் தட்சணகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நளின் குமார் கதீல், உத்தரகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
அப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.
மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரக்யா சிங் இன்று புர்கான்பூரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு திரட்ட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் ‘ரோடு ஷோ’ ரத்து செய்யப்பட்டுள்ளது என கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.






