என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIA Special Court"

    • பிரக்யா, துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
    • இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.

    மகாராஷ்டிராவில் 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு நீதிமன்றம் (NIA ) இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டனர்.

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் உடையது என நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்றும் குண்டுவெடிப்புக்கு 2 வருடங்கள் முன் பிரக்யா துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என NIA நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.

    குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில் வழக்கிலிருந்து விடுதலையான பிரக்யா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து என் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டேன்.

    17 ஆண்டுகள் துறவற வாழ்க்கை நடத்திய பிறகு மக்கள் என்னை பயங்கரவாதியாகக் கருதினர். நான் துறவியாக இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.

    குறைந்த பட்சம் இந்த நீதிமன்றமாவது என் வாதத்தைக் கேட்டது. காவியை பயங்கரவாதி என்று அழைத்தவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இந்த வழக்கில் வெற்றி பெற்றது நான் அல்ல, காவி தான். இது இந்துத்துவாவின் வெற்றி" என்று பிரக்யா கூறினார்.   

    • குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
    • ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.

    தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய தொழிலதிபர் தஹாவூர் ராணா, ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தால் 18 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கேட்டு ராணா பாட்டியாலா என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19 இல் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

    ராணாவின் சட்ட ஆலோசகர் பியூஷ் சச்தேவா, ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், காவலில் இருக்கும் போது தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கவலைப்படும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று  வாதிட்டார்.

    இருப்பினும், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) இந்தக் கோரிக்கையை எதிர்த்தது, நடந்து வரும் விசாரணையை மேற்கோள் காட்டி, ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங், தஹாவுர் ராணா குடும்பத்தினருடன் பேச அனுமதி மறுத்து அவரது மனுவை நிராகரித்தார்.

    • மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
    • உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்

    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    • மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
    • உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அண்மையில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா, உடல்நலக் குறைவாக இருப்பதால், ஓய்வு தேவை என என்.ஐ.ஏ தாக்கல் செய்த பதிலை ஏற்காத சிறப்பு நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    ×