என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2008 Malegaon blast case"

    • 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறினார்.
    • காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி.

    2008, செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். 

    இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    காவலில் சித்திரவதை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், நரேந்திர மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களின் பெயர்களை வெளியிடுமாறு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மும்பையில் முதல் முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், அப்போதைய விசாரணை அதிகாரிகளின் நடத்தையை கடுமையாக விமர்சித்தார்.

    "உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர்கள் ராம் மாதவ் மற்றும் இந்திரேஷ் குமார் போன்றவர்களின் பெயர்களை வெளியிட அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினர்.

    நான் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தினால், சித்திரவதை நின்றுவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால் நான் பொய் சொல்ல மறுத்துவிட்டேன்" என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.

    இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகவும், ஆதாரமற்றது என்றும், 24 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், இந்த அட்டூழியங்களுக்கு முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்வீர் சிங் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், "காவல்துறையினர் செலுத்திய சித்திரவதையால் என் நுரையீரல் கிழிந்துவிட்டது. அவர்கள் செய்த அட்டூழியங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று அவர் கூறினார்.

    தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதை 'காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி' என்று பிரக்யா தாக்கூர் விவரித்தது குறிப்பிடத்தக்கது. 

    • மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டதை பாஜக வரவேற்றுள்ளது.
    • மோடியின் எழுச்சியைத் தடுக்கவும், முஸ்லிம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவும் உருவாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

    மகாராஷ்டிராவில் 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டதை பாஜக வரவேற்றுள்ளது.

    முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் உள்ளிட்டோருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என கூறி NIA நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

    இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் ரவி சங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது "இந்து பயங்கரவாதம்" என்ற கோட்பாட்டை மோடியின் எழுச்சியைத் தடுக்கவும், முஸ்லிம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவும் உருவாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

    ராகுல் காந்தி 2010 இல் அமெரிக்க தூதரிடம், தீவிர இந்து குழுக்கள் லஷ்கர்-இ-தொய்பாவை விட ஆபத்தானவை என்று கூறியதாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான தகவலை ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டினார்.

    ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    மேலும், கர்னல் பிரசாத் புரோஹித், பிரக்யா தாக்கூர் 17 ஆண்டுகளாக பொய் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ரவி பிரசாத் வலியுறுத்தினார்.    

    • குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.
    • மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்.

    மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர். அவர்கள் தங்கள் மதத்திற்காக குறிவைக்கப்பட்டனர். வேண்டுமென்றே மோசமான வழக்கு விசாரணையே விடுதலைக்குக் காரணம்.

    குண்டுவெடிப்பு நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது. மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு மோடி மற்றும் பட்னாவிஸ் அரசாங்கங்கள் விரைவாகக் கோரியதைப் போல இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யுமா?

    மகாராஷ்டிராவின் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இதை வலியறுத்துமா? 6 பேரைக் கொன்றது யார்?

    2016 ஆம் ஆண்டில், வழக்கில் அப்போதைய வழக்கறிஞர் ரோகிணி சாலியன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மென்மையாக நடந்து கொள்ளுமாறு NIA தன்னிடம் கேட்டதாகக் கூறியதை நினைவில் கொள்க.

    2017 ஆம் ஆண்டில், NIA, பிரக்யாவை விடுதலை செய்ய முயற்சித்தது என்பதை நினைவில் கொள்க. அதே பிரக்யா 2019 ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக மாறினார்.

    மாலேகானில் நடந்த சதித்திட்டத்தை கர்கரே கண்டுபிடித்தார். துரதிர்ஷ்டவசமாக 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவரை சபித்ததாகவும், அவரது மரணம் அவரது சாபத்தின் விளைவாகும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.

    தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் தங்கள் தவறான விசாரணைக்கு பொறுப்பேற்பார்களா? பதில் நமக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

    மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்" என்று தெரிவித்தார். 

    • பிரக்யா, துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
    • இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.

    மகாராஷ்டிராவில் 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு நீதிமன்றம் (NIA ) இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டனர்.

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் உடையது என நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்றும் குண்டுவெடிப்புக்கு 2 வருடங்கள் முன் பிரக்யா துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என NIA நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.

    குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில் வழக்கிலிருந்து விடுதலையான பிரக்யா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து என் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டேன்.

    17 ஆண்டுகள் துறவற வாழ்க்கை நடத்திய பிறகு மக்கள் என்னை பயங்கரவாதியாகக் கருதினர். நான் துறவியாக இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.

    குறைந்த பட்சம் இந்த நீதிமன்றமாவது என் வாதத்தைக் கேட்டது. காவியை பயங்கரவாதி என்று அழைத்தவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இந்த வழக்கில் வெற்றி பெற்றது நான் அல்ல, காவி தான். இது இந்துத்துவாவின் வெற்றி" என்று பிரக்யா கூறினார்.   

    • மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார்
    • இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்

    2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

    குறிப்பாக முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ATS) விசாரித்து வந்த இந்த வழக்கு 2011-ல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இஸ்லாமியப் பகுதிகளை குறிவைத்து சதித்திட்டம் தீட்டியதாக ATS குற்றம் சாட்டியது.

    அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவும் வெடிபொருட்களும் வழங்கியதாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

    323 அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கின் இடையில் அண்மையில் தீர்ப்புக்கு முன், நீதிபதி மாற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "காவி பயங்கரவாதம் ஒருபோதும் இருந்ததில்லை, ஒருபோதும் இருக்காது!" என்று பதிவிட்டுள்ளார்.

    • மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

    குறிப்பாக முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ATS) விசாரித்து வந்த இந்த வழக்கு 2011-ல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இஸ்லாமியப் பகுதிகளை குறிவைத்து சதித்திட்டம் தீட்டியதாக ATS குற்றம் சாட்டியது.

    அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவும் வெடிபொருட்களும் வழங்கியதாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

    323 அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கின் இடையில் அண்மையில் தீர்ப்புக்கு முன், நீதிபதி மாற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர், ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. #MalegaonBlast #ColPurohit
    மும்பை:
        
    மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



    இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர்.

    2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.

    அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹு, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகிய மூவர் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், சாத்வி பிரக்யா, லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

    சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். #MalegaonBlast #ColPurohit
     
    ×