என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஹவூர் ராணா"

    • இந்த நிறுவனத்தின் போர்வையில், ஹெட்லி இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்தார்.
    • பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டன் பதவியில் மருத்துவராக முன்பு பணியாற்றியதாக ராணா தெரிவித்தார்.

    மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல் வழக்கின் முக்கிய சதிகாரரான தஹாவூர் உசேன் ராணா, விசாரணையின் போது பரபரப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

    அண்மையில் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அவர் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு விசாரணையின் போது தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்தியுள்ளார்.

    தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு அவர் எவ்வாறு உதவினார் என்பதை அவர் விரிவாக விளக்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் இருந்ததாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் முகவராகப் பணியாற்றி வந்ததாகவும் ராணா தெரிவித்தார்

    மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற முக்கிய பகுதிகளை இலக்குகளாக அடையாளம் காண ஹெட்லிக்கு உதவியதாக ராணா தெரிவித்தார்.

    தாக்குதல்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் கண்காணிப்பை மேற்கொள்ள 'இம்மிகிரண்ட் லா சென்டர்' என்ற முன்னணி நிறுவனத்தை அமைக்கும் யோசனை தனக்கு இருந்ததாக ராணா ஒப்புக்கொண்டார். இந்த நிறுவனத்தின் போர்வையில், ஹெட்லி இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்தார்.

    பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டன் பதவியில் மருத்துவராக முன்பு பணியாற்றியதாக ராணா தெரிவித்தார். பாகிஸ்தான் இராணுவ அமைப்பு, உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளுடன் தான் தீவிரமாக ஒருங்கிணைந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

    தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சஜித் மிர், அப்துல் ரெஹ்மான் பாஷா மற்றும் மேஜர் இக்பால் போன்ற பாகிஸ்தான் அதிகாரிகளை தனக்குத் தெரியும் என்றும் ராணா ஒப்புக்கொண்டார்.

    நவம்பர் 2008 தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, மும்பையின் பவாய் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், தாக்குதல்களுக்கு முன்பு துபாய் வழியாக பெய்ஜிங்கிற்குச் சென்றதாகவும் ராணா விசாரணையில் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் ராணாவின் பங்கை 14 சாட்சிகள் உறுதிப்படுத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
    • உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றக் காவல் முடிவடைந்த பிறகு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ராணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிபதி சந்தர்ஜித் சிங் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

    இதற்கிடையில், ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, ஜூன் 9 ஆம் தேதிக்குள் அவரது உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    பாகிஸ்தான்-கனடா தொழிலதிபரும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ மருத்துவருமான ராணா, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ராணா திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • குடும்பத்தினருடன் பேச ஜெயில் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

    2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஹெட்லீ. இவருடைய நெருங்கிய கூட்டாளி தஹவுர் ஹுசைன் ராணா. இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

    சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங், திஹார் ஜெயில் அதிகாரிகள் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

    • மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.

    டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

    தஹாவூர் ராணாவை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். என்.ஐ.ஏ. மனுவை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை காவலில் எடுக்க உத்தரவிட்டார்.

    பின்னர், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில், ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராணாவுக்கான என்ஐஏ காவல் இன்றுடன் நிறைவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ராணாவுக்கு கூடுதலாக 12 நாட்கள் என்ஐஏ காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
    • ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.

    தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய தொழிலதிபர் தஹாவூர் ராணா, ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தால் 18 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கேட்டு ராணா பாட்டியாலா என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19 இல் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

    ராணாவின் சட்ட ஆலோசகர் பியூஷ் சச்தேவா, ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், காவலில் இருக்கும் போது தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கவலைப்படும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று  வாதிட்டார்.

    இருப்பினும், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) இந்தக் கோரிக்கையை எதிர்த்தது, நடந்து வரும் விசாரணையை மேற்கோள் காட்டி, ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங், தஹாவுர் ராணா குடும்பத்தினருடன் பேச அனுமதி மறுத்து அவரது மனுவை நிராகரித்தார்.

    • பயங்கரவாத அமைப்பு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
    • ராணாவுக்கு துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 238 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான்- அமெரிக்கா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியும் ஒருவர். இவரது நெருங்கிய நண்பர் ராணா.

    ராணாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது. அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு லாஸ் ஏஞ்சல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு 18 நாட்கள் ராணாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது நாளாகவும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராணாவை நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பயங்கரவாத அமைப்பு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் அவரை பல நகரங்களுக்கு அழைத்து செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

    மேலும், கொச்சியில் ராணாவின் குரல் மாதிரிகளும் ஆய்வு செய்யபடவுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் காவலில் இருக்கும் முக்கிய சாட்சி ஒருவர் கொச்சியை சேர்ந்தவர். அவர் பயங்கரவாதி ராணா மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோருக்கு உதவியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தவும் ராணாவை தெற்கு பகுதி நகரங்களுக்கு அழைத்து வருகின்றனர். ராணாவிடம் விசாரணை நடத்தும் 19 என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவில் 2 பேர் கொச்சியை சேர்ந்தவர்கள்.

    ராணாவுக்கு துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணைக்கு ராணா முழுமையாக ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும் அவர் மும்பை தாக்குதலுக்கு முன்னதாக அவர் மும்பையில் இருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார். அவரிடம் மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
    • ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் பாகிஸ்தான்- அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி. இவனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தஹாவூா் ராணா. இவனது ஆலோசனை மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.

    அமெரிக்க சிறையில் இருந்த ராணா, நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை தாக்குதலுக்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, டெல்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.

    இதன் அடிப்படையில் ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொச்சியில் ராணா 13 பேருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எங்கு சந்தித்தனர்? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதன் அடிப்படையில் ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.

    • 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
    • ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது.

    26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, ராணாவை மோடி அரசு தூக்கிலிடும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    முன்னதாக ராணா வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவரை கைது செய்தது. மேலும் 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பாஜக இதை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார். அவர் கூறியத்தவது, "ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும், ஆனால் அவர் பீகார் தேர்தலின் போது தூக்கிலிடப்படுவார். ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது. எனவே ராணாவை மீண்டும் கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று கூறினார்.

    பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி, காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. பாஜக-ஜேடியு கூட்டணி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியைக் கோரும் வகையில், பாஜக தனது வாக்கு எண்ணிக்கையை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் கருத்துக்கள் வந்துள்ளன.  

    • பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான ராணாவும் கூட்டு சதியில் ஈடுபட்டார்.
    • 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

    தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின் நேற்று அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணா கை கால்களில் விலங்குடன் நாடுகடத்தப்பட்ட 2 புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

     

     இதற்கிடையே ராணா நாடுகடத்தல் குறித்து வாஷிங்க்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் பேசினார்.

    "2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அவரது பங்கிற்கு நீதியை எதிர்கொள்ள ஏப்ரல் 9 ஆம் தேதி, அமெரிக்கா தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது

    இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது.

    அதிபர் டிரம்ப் கூறியது போல், உலகளாவிய பயங்கரவாதக் கொடுமையை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரியில் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
    • டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது.

    புதுடெல்லி:

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.

    டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

    தஹாவூர் ராணாவை நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். என்.ஐ.ஏ. மனுவை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை காவலில் எடுக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    • அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்பட்ட ராணா இன்று மாலை டெல்லி விமான நிலையம் கொண்டு வரப்பட்டார்.
    • என்.ஐ.ஏ. அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக கைது செய்துள்ளது.

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.

    ராணா டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக அவரை கைது செய்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து என்.ஐ.ஏ. குழு, தேசிய பாதுகாப்பு குழு, மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஆகியவை சிறப்ப விமானம் ராணவை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.

    ராணாவுக்காக டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தில் இருந்து வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா ஆஜராகிறார். சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான், மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் அரசு சார்பில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ராணா நடு கடுத்தப்பட்ட மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ராஜாங்க ரீதியிலான வெற்றி- அமித் ஷா.
    • இது வெற்றி அல்ல, மக்களை திசை திருப்புவதற்கான சூழ்ச்சி- கண்ணையா குமார்.

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ராணா இந்தியா கொண்டு வரப்பட்டது, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ராஜாங்க ரீதியிலான வெற்றி (diplomatic success) என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர் கண்ணையா பதில் அளிக்கையில் "ராணா நாடு கடுத்தப்பட்டது ராஜாங்க ரீதியிலான (diplomatic success) வெற்றி அல்ல. மத்திய அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைவதில் இருந்து பொது மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்கான சூழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக பெயருக்கு ஏற்ற சாதனை எதையும் செய்யவில்லை என்பதால், ஏதாவது ஒரு சாக்குப்போக்கின் கீழ் பொதுப் பிரச்சினைகளைத் திசை திருப்ப முயற்சிக்கிறது. வக்ஃப் மசோதாவும் அதற்கு மற்றொரு உதாரணம்தான்.

    ஏழை முஸ்லிம்களின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாக அரசாங்கம் கூறியது. முஸ்லிம் சமுதாயத்தினர் தங்களுக்கு சொந்தமான இடங்களின் மொட்டை மாடிகளில் 'நமாஸ்' செய்ய அனுமதிக்காத ஒரு ஆட்சியில் இருந்து இப்படி கூறுவதை, யார் நம்புவார்கள்?

    370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அவர்களின் சொல்லாட்சியை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம். இப்போது பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும் என்று ஒவ்வொரு பாஜக தலைவரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போதிருந்து அங்கு சொத்து வாங்க முடிந்த ஒருவரை எனக்குக் காட்டுங்கள்" என்றார்.

    ×