என் மலர்
நீங்கள் தேடியது "மும்பை தொடர் குண்டுவெடிப்பு"
- மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.
டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
தஹாவூர் ராணாவை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். என்.ஐ.ஏ. மனுவை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை காவலில் எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராணாவுக்கான என்ஐஏ காவல் இன்றுடன் நிறைவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராணாவுக்கு கூடுதலாக 12 நாட்கள் என்ஐஏ காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், உலகையே உலுக்கின. 257 பேரை பலி கொண்டு, 700-க்கும் மேற்பட்டோரை காயப்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அகமது லம்பு என அறியப்படுகிற அகமது ஷேக் (வயது 52) என்பவர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, நாட்டில் இருந்து தப்பி விட்டார். அதன்பின்னர் அவர் போலீஸ் பிடியில் சிக்கவே இல்லை. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ (சர்வதேச தேடல் அறிவிக்கை) பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவரது தலைக்கு ரூ.5 லட்சம் விலையும் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அவர் குஜராத்தின் தென்பகுதியில் வல்சாட் கடற்கரை பகுதியில் பதுங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து சென்று, அகமது ஷேக்கை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி உள்ள அவர், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படுவார் என குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
அகமது லம்பு, மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. #BombayBlast #AhmedLambu #tamilnews






