என் மலர்
நீங்கள் தேடியது "மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி"
- ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
- ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் பாகிஸ்தான்- அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி. இவனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தஹாவூா் ராணா. இவனது ஆலோசனை மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.
அமெரிக்க சிறையில் இருந்த ராணா, நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை தாக்குதலுக்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, டெல்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொச்சியில் ராணா 13 பேருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எங்கு சந்தித்தனர்? என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதிச்சடங்கில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது, சட்ட மந்திரி சையதுஅலி ஷாபர் உள்ளிட்ட 5 பேர் குழு பங்கேற்றது. இந்த குழுவில் தன்யாள்கிலானி என்பவரும் இடம்பெற்றிருந்தார்.
இவர் பாகிஸ்தானில் மத்திய சினிமா தணிக்கை குழு தலைவராக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
ஆனால் இவர் மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி டேவிட் ஹேட்லியின் தம்பி என்று தெரியவந்துள்ளது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

பின்னர் பயங்கரவாதிகளை அனுப்பிய அவன் பாகிஸ்தானில் இருந்தபடி சாட்டிலைட் போன்மூலம் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்றிருந்த அவன் பின்னர் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டான். தற்போது அமெரிக்க ஜெயிலில் இருக்கிறான்.
அவருடைய தம்பி தன்யாள்கிலானி வாஜ்பாய் இறுதி சடங்கில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தன்யாள்கிலானி டேவிட் ஹேட்லியின் தம்பி என தெரிந்திருந்தும் அவரை இந்தியாவிற்கு வர விசா வழங்கி உள்ளனர். இறுதிசடங்கில் பங்கேற்கவும் அனுமதி அளித்துள்ளனர்.
இதுபற்றி வெளியுறவு துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தன்யாள் கிலானி, டேவிட் ஹேட்லியின் தம்பியாக இருந்தபோதும் அவர் மீது பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக எந்த புகாரும் இல்லை.
இந்தியா தரப்பில் இருந்து அவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவில்லை. எனவே பாகிஸ்தான் அரசு குழுவில் அவர் வருவதால் நம்மால் தடுக்க முடியாது என்று கூறினார்கள். #AtalBihariVajpayee






