என் மலர்

  செய்திகள்

  சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரின் ‘ரோடு ஷோ’ ரத்து
  X

  சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரின் ‘ரோடு ஷோ’ ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் இன்று சாலை வழியாக பேரணி நடத்தி வாக்கு திரட்ட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’’ என்று பிரசாரத்தின்போது பேசினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் தாகூரிடம் இதுகுறித்து உங்களது கருத்து என்ன? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

  அப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.

  மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.  கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரக்யா சிங் இன்று புர்கான்பூரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு திரட்ட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் ‘ரோடு ஷோ’ ரத்து செய்யப்பட்டுள்ளது என கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×