என் மலர்
இந்தியா

VIDEO: கிரேனில் சிக்கிக் கொண்ட ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்த பாஜக எம்.பி.
- பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story






