என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sardar Vallabhbhai Patel"

    • பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.

    அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.
    • இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக வல்லபாய் படேல் இருந்தார்.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.

    தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர். அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது. இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக அவர் இருந்தார், இதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அதன் விதியை வடிவமைத்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவை மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    • சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.

     

    • ஆனால் அவரது வார்த்தைகளை அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை.
    • இனி யாரும் இதற்கு ஆதாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.

    மே 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

    குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி பேசுகையில், "1947ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது அன்றிரவே, காஷ்மீர் மண்ணில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.

    பாகிஸ்தான் முஜாஹிதீன் என்ற பெயரில் இந்தியாவின் ஒரு பகுதியை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது. அப்போதே முஜாஹிதீன்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் மீட்கும் வரை ராணுவ தாக்குதலை நிறுத்தக்கூடாது என அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார்.

    ஆனால் அவரது வார்த்தைகளை அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஆரம்பித்த இந்த முஜாஹிதீன்களின் ரத்தக்களரி 75 ஆண்டுகளாகத் தொடர்கிறது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் என்பது பினாமி போர் அல்ல. அவை பாகிஸ்தானால் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். அதுதான் அவர்களின் போர் உத்தி. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் போரை நடத்துகிறது பாகிஸ்தான்.

    இந்தியாவின் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பிரதமர் விளக்கினார். "ஆபரேஷன் சிந்தூர், 22 நிமிடங்களில் 9 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இது கேமராக்கள் முன் நடந்தது. இனி யாரும் இதற்கு ஆதாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை" தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் கருத்துக்கள் வந்துள்ளன.

    • டெல்லியில் சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுடெல்லி:

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    இந்நிலையில், குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் தலைவிதியை அவர் வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பை நாம் நினைவு கூருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவருடைய சேவைக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
    • அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்.

    இன்று அக்டோபர் 31ம் தேதி, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள். இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமைப் பேரணி மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "நாடுகள் பிரிந்து செல்கின்றன, ஆனால் இந்தியாவை நெருங்கி வருகின்றன. இது சாதாரண விஷயமல்ல, புதிய வரலாறு எழுதப்படுகிறது. இந்தியா தனது பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. எனவே நாம் நமது ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்."

    "இந்தியாவின் எழுச்சியைப் பற்றி சில வக்கிர சக்திகள் கவலைப்படுகின்றன. இந்தியாவிற்குள்ளும், அதற்கு வெளியேயும் இத்தகையவர்கள் நிலையற்ற தன்மை மற்றும் அராஜகத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தி செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்."

    "இவர்களின் இலக்கு பெரும் சக்திகள் ஆகும், அவர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் சாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் சமூகத்தையும், ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்."

    "'ஏழை இந்தியா, பலவீனமான இந்தியா' என்ற அரசியல் அவர்களுக்குப் பொருந்துவதால், இந்தியா வளர்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். #SardarVallabhbhaiPatel #RunForUnity
    புதுடெல்லி:

    ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

    டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.




    டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். விளையாட்டு வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.

    சென்னையில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, மாநில முதல்வர் சர்பானந்த சோனோவல் ஆகியோர் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்தனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

    படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள மிகப்பிரமாண்டமான சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #SardarVallabhbhaiPatel #RunForUnity #StatueOfUnity #IronManofIndia #NationalUnityDay
    சர்தார் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் படேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். #SardarVallabhbhaiPatel
    இந்தியாவின் ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள படேல் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 



    நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. 



    படேல் சுதந்திர இந்தியாவின் முதலாவது துணைப் பிரதம அமைச்சராகவும், முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் படேல் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SardarVallabhbhaiPatel #StatueOfUnity

    நாட்டுப்பற்றை தட்டியெழுப்பியவர் சர்தார் வல்லபாய் படேல் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #SardalPatel #PMModi #Inaugurate
    புதுடெல்லி:

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய வரலாற்றில் 1947-ம் ஆண்டு முதல்பாதி மிகவும் முக்கியமான காலகட்டமாகும். நாட்டில் காலணி ஆட்சி முடிவுக்கு வருவதும், இந்திய பிரிவினை உறுதியானதுமான தருணம். ஆனால், நாடு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவினையை எதிர்கொள்ளுமா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நேரம். விலைவாசிகள் அதிகரித்ததோடு, உணவு பற்றாக்குறையும் நாட்டில் சாதாரணமாக காணப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவின் ஒருமைப்பாடு மிகவும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியிருந்தது.



    இதுபோன்ற சூழ்நிலையில் 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் மாகாணங்கள் இணைப்புத் துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் முக்கிய நோக்கம் பரப்பளவு, மக்கள்தொகை, புவி அமைப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளில் மிகவும் வேறுபட்டிருந்த நாட்டிலுள்ள 550-க்கும் அதிகமான சுதேச மாகாணங்களோடு பேச்சுகள் நடத்தி, அதற்கு உத்வேகம் அளித்து, மாகாணங்களோடு இந்தியாவின் உறவை பராமரிப்பதாகும்.



    இந்த சூழ்நிலையில், மகாத்மாகாந்தி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். மாநிலங்களின் பிரச்சினைகள் மிகவும் கடினமானது, அதை நீ மட்டுமே தீர்க்க முடியும் என்று உறுதிபடக் கூறியிருந்தார். மகாத்மா காந்தி நீ என்று குறிப்பிட்டிருந்தது வேறு யாருமல்ல, சர்தார் வல்லபாய் படேல்தான் அவர். அவருடைய பிறந்தநாளைதான் நாம் இன்று கொண்டாடுகிறோம். அவருக்குத்தான் நாம் இன்று புகழஞ்சலி செலுத்துகிறோம்.

    24 மணி நேரமும் ஓய்வின்றி சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்ட அயராத முயற்சியினால்தான், இன்று நம்மிடம் உள்ள இந்தியாவின் வரைபடம் உருவானது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நாம் புதிய விடியலை கொண்டாடிய வேளையில், தேசத்தை நிர்மாணிக்கும் பணி முற்றுப்பெறாமலே இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி, நாட்டின் அன்றாட நிர்வாகம் தொடர்பான விஷயங்கள், நாட்டு மக்களின் நலன்களை பாதுகாப்பது, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர, ஒதுக்கப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பது உள்ளிட்டவற்றுக்கு தேவையான நிர்வாக பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

    சர்தார் வல்லபாய் படேலிடம் இருந்த ஒரே மாதிரியான 2 பண்புகள் நம்பிக்கை மற்றும் நேர்மையாகும். நாட்டிலுள்ள விவசாயிகள் அவர் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர், ஒரு விவசாயியின் மகன் மட்டுமல்ல, பர்தோலி சத்யாகிரகத்தை முன்நின்று நடத்தியவர். உழைக்கும் வர்க்கத்தினர் சர்தார் வல்லபாய் படேலை நம்பிக்கை நட்சத்திரமாகவே பார்த்தனர் என்பதோடு, உழைக்கும் வர்க்கத்திற்காக பேசும் ஒரு தலைவராகவும் திகழ்ந்தார். வர்த்தகர்களும், தொழில் அதிபர்களும் சர்தார் படேலோடு பணிபுரிவதை விரும்பினார்கள். ஏனென்றால், இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவராக அவர் இருக்கிறார் என்பதை உணர்ந்ததால், படேலை அவர்கள் விரும்பினார்கள்.

    சர்தார் வல்லபாய் படேலின் சக அரசியல் தலைவர்களும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் படேலின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். நாடு முழுவதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல்.

    இந்த ஆண்டு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் மிகவும் சிறப்பானது. 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளோடு, ஒற்றுமை சிலை இன்று திறந்துவைக்கப்படுகிறது. நர்மதை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒற்றுமை சிலை உலகில் உள்ள மிக உயர்ந்த சிலையாகும். பூமித்தாயின் மகன் சர்தார் வல்லபாய் படேல் விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்து நின்று நமக்கு வழிகாட்டுவதோடு, நமக்கு ஊக்கமளிப்பார் என்பதில் ஐயமில்லை.

    சர்தார் வல்லபாய் படேலின் இந்த மாபெரும் சிலை அமைக்கப்படுவதை உறுதிசெய்ய இரவு-பகல் பாராது உழைத்த அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்த உயர்ந்த நோக்கத்துடன் கூடிய திட்டத்தை செயல்படுத்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி நாங்கள் அடிக்கல் நாட்டியது நோக்கி எனது சிந்தனை செல்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் இதுபோன்ற ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைபட வைத்திருக்கிறது. வரும் காலத்தில் அனைவரும் இந்த ஒற்றுமை சிலையை பார்த்துச் செல்ல வேண்டும் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

    இந்த ஒற்றுமை சிலை, இதயங்களின் ஒற்றுமை மற்றும் நமது தாய் நாட்டின் புவியியல் ஒருங்கிணைப்பின் அடையாளமாக இருக்கும். பிரிந்திருந்தால் நாம் ஒருவரையொருவர் எதிர்கொள்ள முடியாது என்பதை இந்த சிலை வலியுறுத்துகிறது. இணைந்தால், இந்த உலகத்தையே நாம் எதிர்கொள்ளலாம். அதேவேளையில், வளர்ச்சி மற்றும் புகழேணியின் உச்சத்தையும் தொடலாம்.

    ஏகாதிபத்தியத்தை உடைத்தெறிய சர்தார் வல்லபாய் படேல், ஆச்சரியப்படக்கூடிய வேகத்தில் பணியாற்றியதோடு, நாட்டின் புவி பரப்பை ஒற்றுமைப்படுத்தி, நாட்டுப்பற்றை தட்டியெழுப்பியவர். இந்தியா சிறு துண்டுகளாக பிரிந்து போவதை தடுத்ததோடு, நாட்டின் கட்டமைப்போடு சிறிய பகுதிகளைக் கூட ஒருங்கிணைத்தவர். இன்று நாம் இந்த 130 கோடி இந்தியர்கள் தோளோடு தோள் நின்று புதிய இந்தியாவை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி மிகவும் வலுவானது, வளமானது மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியது. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், என்ன விரும்பியிருப்பாரோ, அதை நிறைவேற்றும் வகையில் நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் ஊழல் அல்லது பாரபட்சமின்றி உரிய நபருக்கு சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில் ஒவ்வொரு முடிவுகளும் எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SardalPatel #PMModi #Inaugurate
    ×