search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PoK"

    • ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசினார்.

    ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு (திருத்தம்) 2023 மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ஜம்முவில் 37 இடங்கள் இருந்தன. தற்போது 43 இடங்களாக அதிகரித்துள்ளன. முன்னதாக காஷ்மீரில் 46 இடங்கள் இருந்தன. தற்போது 47 இடங்களாக அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது என்பதால் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.

    இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும். அவர்களை யார் தடுத்து வைத்துள்ளார்கள்?. நம்முடைய ராணுவம் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் சூழ்நிலை தற்போது பலவீனமாக உள்ளது. தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற வேண்டும். அதன்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் நிலவ அனுமதிக்க வேண்டும்" என்றார்.

    • பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
    • கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்

    இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).

    ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.

    "பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.

    இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்லைக்கோட்டுப் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்தார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. #Pakistanihelicopter #PoK
    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான்  எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் நேற்று இந்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று பிற்பகல் பாகிஸ்தான் நாட்டின் வான் எல்லை வழியாக பறந்துவந்த ஹெலிகாப்டர் ஒன்று குல்பூர் செக்டர் அருகே இந்திய வான் எல்லைக்குள் 700 மீட்டர் தொலைவு அத்துமீறி ஊடுருவி சிறிது நேரம் வட்டமிட்டு பறந்தது. இந்த காட்சியை எல்லையில் உள்ள இந்திய வீரர்கள் வீடியோவாக பதிவு செய்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து அத்துமீறிய அந்த வெள்ளை நிற ஹெலிகாப்டர் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பின்னர் அது மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டது. ஆனால், அந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமானதா? அல்லது தனியாருக்கு சொந்தமானதா எனும் தகவல் வெளியாகாமல் இருந்தது.

    இந்நிலையில், எல்லையில் அத்துமீறி ஊடுருவிய ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ராஜா பரூக் ஹைதர் கான் பயணித்தார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ’எல்லையில் பாகிஸ்தான் அரசு அத்துமீறியதாக நினைத்து இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஆனால், உண்மையில் துப்பாக்கிச்சூடு நடந்த போது நாங்கள் எல்லையை தாண்டவில்லை. எங்களுக்கு சொந்தமான எல்லையில் தான் ஹெலிகாப்டர் பறந்தது’ என தெரிவித்துள்ளது.

    இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருநாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் எல்லையில் அத்துமீறிய ஹெலிகாப்டர் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வரலாறு :

    ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள இப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.

    முசாபராபாத்தை தலைநகராக கொண்ட இந்தப் பகுதியில் நமது நாட்டின் சட்டமன்றத் தொகுதி அளவில் 49 தொகுதிகள் அமைந்துள்ளன. இதன்மூலமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    இங்கு தனியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. இருப்பினும் அவை பாகிஸ்தான் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை பாகிஸ்தானில் ‘ஆசாத் காஷ்மீர் (சுதந்திரம் பெற்ற காஷ்மீர்)’ என அழைக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. #Pakistanihelicopter #PoK
    ×