என் மலர்

  நீங்கள் தேடியது "Kapil Sibal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் கூறியுள்ளார். #RafaleDeal #KapilSibal
  புதுடெல்லி:

  காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தற்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெக்ரிஷி, கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தார்.

  அந்த காலகட்டத்தில்தான், அதாவது 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, ரபேல் ஒப்பந்ததை இறுதி செய்து அறிவித்தார்.

  நிதித்துறை செயலாளர் என்ற முறையில், ரபேல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ராஜீவ் மெக்ரிசி பங்கேற்றுள்ளார். எனவே, அவர் ரபேல் பேரம் குறித்து தணிக்கை செய்வதற்கு உகந்தவர் அல்ல. ஆகவே, ராஜீவ் மெக்ரிஷி, ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார். #RafaleDeal #KapilSibal 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என மூத்த காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். #UGC #SurgicalStrikeDay #KapilSibal #Demonetisation
  புதுடெல்லி:

  2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம்,  அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை பெற்றது.

  இதற்கிடையே, வரும் 29-ம் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு முன்னர் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அன்றைய தினம், என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

  இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்நிலையில், பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது.

  ஆனால், சர்ஜிகல் ஸ்டிரைக் நாளை அனைத்து பல்கலைக்கழகங்களும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

  இதேபோல், பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  #UGC #SurgicalStrikeDay #KapilSibal #Demonetisation
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார். #KapilSibal #NarendraModi
  புதுடெல்லி:

  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வராகடன்களை அதிகமாக உருவாக்கி விட்டதால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

  இதுசம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல் கூறியதாவது:-

  பிரதமர் மோடி விரக்தியில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆதாரம் இல்லாத தகவல்களை உரக்க கூறினால் அது மக்களிடம் எடுபட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.

  முதலில் இதுசம்பந்தமான ஆதாரங்களை மோடி வெளியிடட்டும். மோடி தான் கடுமையான உழைப்பாளி என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிவிட்டார்.

  யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. அதுக்கான தீர்வையும் காணவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் நாட்டின் செயல்படாத சொத்தாக இருந்து கொண்டிருக்கிறது.

  இவ்வாறு கபில்சிபல் கூறினார்.  #KapilSibal #NarendraModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. #RafaleDeal #KapilSibal
  புதுடெல்லி:

  பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

  இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை மோடி அரசு வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ரகசியம் ஆகும். எனவே இதை பகிரங்கமாக வெளியிட இயலாது’ என்று மறுத்து வருகிறது.  இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு இருக்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.

  போர் விமானத்தின் தயாரிப்பு தொழில்நுட்பம் தொடர்பாக நாங்கள் கேள்வி எதையும் கேட்கவில்லை. எதன் அடிப்படையில் முன்பு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விட மும்மடங்கு விலைக்கு வாங்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை அறிந்துகொள்ளவே விரும்புகிறோம். 2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் இத்தொகை 2016-ம் ஆண்டில் ரூ.1,600 கோடியாக அதிகரித்து உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பிரபல வக்கீல்களான நீங்களும்(கபில்சிபல்), ப.சிதம்பரமும் இது தொடர்பாக கோர்ட்டுக்கு ஏன் செல்லக்கூடாது?... என்ற நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “இப்பிரச்சினையில் மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் கிடைக்கும் வரை கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஆவணங்கள் எங்களது கைகளுக்கு வந்தவுடன் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்” என்று குறிப்பிட்டார்.  #RafaleDeal #KapilSibal 
  ×