என் மலர்

  நீங்கள் தேடியது "EVM"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாட்ஸ்அப் செயலியில் வேகமாக வலம் வரும் அதிர்ச்சி வீடியோவின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.  இந்தியாவில் 2019 பொது தேர்தல் நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஒட்டுமொத்த தேசமே புதிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பழைய வீடியோ ஒன்று வைரலாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

  வைரலாகும் ஒரு நிமிட வீடியோவில் அறையினுள் அதிகாரிகள் சோதனை செய்வதும், அந்த அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.   பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்தவர்களின் விவரங்களை ஒருவர் இந்தி மொழியில் சேகரிக்கும் காட்சிகளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. பொது தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட அரசியல் கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி இருக்கிறது என்ற வாக்கில் தகவல்கள் பரப்பப்படுகிறது.

  உண்மையில் தற்சமயம் பரவி வரும் வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது ஆகும். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய பொது தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயன்றதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் மறுப்பக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.  இந்திய பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

  இந்நிலையில், 2019 இந்திய பொது தேர்தல் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயற்சி செய்ததாக செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

  டி.என்.என். வொர்ல்டு எனும் பெயர் கொண்ட செய்தி நிறுவனம் சார்பில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல் அதிகாரியிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு பற்றி குற்றச்சாட்டு தெரிவித்தது.    இதேபோன்று 2019 பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதில் இருந்து நிலவும் சூழல் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

  இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் மே 19 ஆம் தேதிக்கு பின் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சற்று ஓய்வெடுக்கலாம் என்றும் இந்த சமயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற பா.ஜ.க. ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி தொகுப்பாளர் தெரிவிக்கிறார். மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 

  7.53 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் செய்தி தொகுப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. மேலும் அவர் வழங்கிய விவரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இவற்றை வைத்து பார்க்கும் போது வைரலான வீடியோ முற்றிலும் பொய் தகவல்களை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.  டி.என்.என். வொர்ல்டு வலைதளம்

  வைரலான வீடியோவை வெளியிட்ட வலைதளம் டிரைகலர் நியூஸ் நெட்வொர்க் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த வலைதளத்தில் இந்திய பொது தேர்தல் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெற்று இருக்கின்றன. 

  இதே வலைதளத்தில் 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி வீடியோவில் அமெரிக்க வல்லுநர் ஒருவர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதுதவிர இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் பா.ஜ.க. கட்சி பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததாகவும் இதே தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. 

  இந்த வலைதளத்திற்கென ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களும் இயங்கி வருகின்றன. இவற்றிலும் பா.ஜ.க. கட்சிக்கு எதிரான தகவல்கள் அதிகளவில் பதிவிடப்பட்டுள்ளன. டி.என்.என். வலைதளத்தின் உரிமையாளர் டயானா இரினா பிசின் ஆவார். இவர் ரோமானியாவை சேர்ந்தவர் ஆவார். நிறுவனத்தின் ஒற்றை பங்குதாரர் மற்றும் தலைவராக இவர் இருக்கிறார். அலுவலக முகவரி லண்டனில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முகவரி போலியானதாகும். இந்த முகவரியை பயன்படுத்த ஆண்டு கட்டணம் செலுத்தினாலே போதுமானது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்றும் அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்றும் நரேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
  மதுரா:

  உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 18-ந் தேதியே அங்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.
  ஓட்டுப்பதிவு எந்திரங்கள், மதுராவில் மண்டி சமிதி பகுதியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்று நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார். எனவே, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த அறையை நேற்று 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சர்வக்ய ராம் மிஸ்ரா பார்வையிட்டார். பிறகு அவர் கூறுகையில், “எலிகளால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #SatyabrataSahoo #MaduraiConstituency
  சென்னை:

  தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குசாவடிகளில் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு எந்திரங்கள் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த 20-ந்தேதி மதுரை மேற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் கீழ் பணியாற்றும் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான கே.சம்பூரணம் என்பவர் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் சென்று உள்ளார். இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டரிடம் விரிவான அறிக்கை அனுப்ப கேட்கப்பட்டது. அதன்படி அவர் அறிக்கை அனுப்பி உள்ளார்.  தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் எந்திரங்கள் உள்ள அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) அருகில் உள்ள தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைத்திருந்த அறைக்குத் தான் (ஸ்டோர் ரூம்) சென்றுள்ளார். வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை பாதுகாப்பாக உள்ளது. அங்கு யாரும் அத்துமீறி நுழையவில்லை. நுழையவும் முடியாது. இருந்த போதிலும் விதிகளை மீறித் தான் அவர் சென்றுள்ளார். முறையாக அனுமதி பெறாமல், முறையான அடையாள அட்டை காண்பிக்காமல் அறைக்குள் சென்றதால் அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

  தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்யத் தான் தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ள வளாகத்துக்கு சென்றதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தபால் ஓட்டுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் (ஸ்ட்ராங் ரூம்) தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துணை ராணுவத்தை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கேட்கின்றனர். அனைத்து மையங்களும் 3 அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர்தான் உள்ளனர். அதனை தொடர்ந்து மாநில போலீசாரும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

  அரசியல் கட்சியினரும் அங்கு சென்று பார்க்கலாம். ஏதாவது குறை இருந்தால் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கலாம். இருந்தாலும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களிடமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறைப்படி மின்னணு எந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.

  மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னையில் இருந்து கண்காணிக்க இணைப்பு வசதி இல்லை.

  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் சில பகுதியில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம், எந்தந்த பகுதிகளில் எத்தனை பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றி வாக்குச்சாவடி வாரியாக தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு அவர், ஒரு சப்-கலெக்டர் தலைமையில் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அனுப்புவதாக கூறி உள்ளார்.

  தொடர்ந்து மே 19-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். 4 சட்டசபை தொகுதி இடைதேர்தல்களுக்கான மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தி தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #MaduraiConstituency

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார். #ChandrababuNaidu
  புதுடெல்லி:

  ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதேபோல் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் சில பூத்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

  வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, புகார் மனு கொடுத்தார். அதில், ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காதது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலின்போது பிரச்சினை செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #ChandrababuNaidu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சேதப்படுத்திய ஜனசேனா கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #LokSabhaElections2019 #AndhraElections #JanaSenaCandidate
  அமராவதி:

  மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

  வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

  இந்நிலையில், ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயர் மற்றும் சின்னம் தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  இதில் ஆத்திரமடைந்த வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்துள்ளார். இதனால் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.  போலீசார் அங்கு வந்து வேட்பாளர் மதுசூதன் குப்தாவை கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019 #AndhraElections #JanaSenaCandidate
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #LokSabha #EVM #ElectionCommission
  புதுடெல்லி:

  பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், குறிப்பிட்ட தொகுதிகளில் களத்தில் இருக்கும் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சின்னங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த நடவடிக்கையால் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் இருந்தால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.  எனவே இதை தவிர்க்கும் வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளிலும் வேட்பாளர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

  இதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், சமீபத்தில் எடுத்துக்கொண்ட தபால் தலை அளவிலான புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் வருவாய் ஈட்டுவதில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு சாதனை படைக்க உள்ளது. #EVMrecordrevenue
  ஐதராபாத்:

  இந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆனால், வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

  இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனமான, எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் ஆப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தயாரிப்பதற்காக புதிய ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இசிஐஎல் தனது  53 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக வருவாய் ஈட்டி புதிய சாதனையை எட்ட உள்ளது.  புதிய ஆர்டர்களுடன், பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக புதிய எம்3 ரக இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இசிஐஎல் நிறுவன வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.1275 கோடியாக இருந்தது. 2018-19 நடப்பு நிதியாண்டில், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வாங்குவதற்காக இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையம் ரூ.1800 கோடிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதனால், இந்த நிதியாண்டின் இசிஐஎல் நிறுவனத்தின் வருவாய் ரூ.2400 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிறுவனம் ராணுவத்திற்கான மின்னணு மின்சுற்றுகள், அணு உலைகளில் பயன்படும் ரேடியோக்கள், செயலற்ற தன்னியக்க மறுபயன்பாடு சாதனங்கள் போன்ற கருவிகளையும் தயாரித்து வருகிறது. 2017-18 ஆண்டுக்கான அறிக்கையில், அணு சக்தியுடனான இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்போது, நடப்பு நிதியாண்டில் ரூ.1800 கோடிக்கு வருவாய் இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

  இது குறித்து அதிகாரி கூறுகையில், ‘ 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பிற்கு மொத்தமாக ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டின் வருவாய் ரூ.2600 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய இயந்திரங்களுக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் தயாரித்து வழங்கும்போது நிறுவனத்தின் வருவாய் மேலும் உயரும்’ என கூறினார்.

  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பில் மற்றொரு முக்கிய நிறுவனமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா தேர்தல்களில் இந்நிறுவனத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. #EVMrecordrevenue
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலமாக 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.
  லண்டன்:

  கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இந்நிலையில், அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.

  அவர் லண்டனில் இருந்து ‘ஸ்கைப்’ மூலமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

  நான் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றினேன். 2014-ம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த குழுவில் நானும் இருந்தேன். அப்போது, அந்த எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? என்றும், எப்படி செய்யலாம்? என்றும் கண்டறியுமாறு எங்களை மின்னணு கழகம் கேட்டுக்கொண்டது. அதன்படி, அந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்தது.

  இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார். அதை ‘கொலை’ என்று வழக்கு பதிய முயன்ற என்.ஐ.ஏ. அதிகாரியும் கொல்லப்பட்டார். என் குழுவினரும் கொல்லப்பட்டதால், நான் பயந்துபோய் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

  பா.ஜனதா மட்டுமின்றி, காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கிடையே, தேர்தல் தில்லுமுல்லு விவகாரத்தை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

  அதே சமயத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் உறுதிபட தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருட்டு இயந்திரங்கள் என குறிப்பிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவற்றை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM
  கொல்கத்தா:

  கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

  இந்த கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியதாவது:

  'உண்மையை சொல்லப் போனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாமே திருட்டு இயந்திரங்கள். உலகில் தற்போது எந்த நாட்டு தேர்தல்களிலும் புழக்கத்தில் இல்லாத இந்த திருட்டு இயந்திரங்களை நமது நாட்டில் இருந்தும் ஒழிக்க வேண்டும்.  இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையாளரை அணுக வேண்டும், மின்னணு இயந்திர வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வெளிப்படைத்தன்மை கொண்ட வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டார்.

  'எந்த தனிமனிதரையும் (மோடி) ஒழிப்பது நமது எண்ணமல்ல. நமது நாட்டை காப்பாற்றுவதும் நமது நாட்டின் விடுதலைக்காக பலர் புரிந்த தியாகங்களை கவுரவிப்பதும்தான் நமது நோக்கமாகும்.

  காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான் காரணம். மதத்தின் அடிப்படையில் மக்கள் பிளவுப்படுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானியர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

  ஆனால், அதற்கு நேர்மாறாக அங்குள்ள மக்கள் அனைவரும் இந்தியர்களாக வாழ்வதற்குதான் ஆசைப்படுகிறார்கள். நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது தாய்நாடான இந்தியாவை நான் நேசிக்கிறேன்.

  முத்தலாக் தடுப்பு சட்ட மசோதாவுக்காக பாராளுமன்றத்தில் வரிந்துக்கட்டிக் கொண்டு குரல் கொடுத்த பா.ஜ.கவினர் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இருந்து விட்டனர்.

  பா.ஜ.க. அரசை வெளியேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்காக நாம் ஓரணியில் திரண்டு, ஒருமித்த குரலில் போராடுவோம். பிரதமர் யார்? என்பதை தேர்தல் முடிவுக்கு பிறகு தீர்மானித்து கொள்ளலாம். இனி அமையும் புதிய அரசு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்’

  இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால் ரூ.33,200 செலவாகும் என சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. #LawPanel #SimultaneousPolls
  புதுடெல்லி:

  பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஒரே நேர தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றியும் கட்ட கமிஷன் கூறியிருந்தது.

  அது குறித்து சட்ட கமிஷன் தனது அறிக்கையில், ‘பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால், 12.9 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 12.3 லட்சம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலகுகள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து இருக்கிறது. இந்த 3 அலகுகளும் சேர்ந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.33,200 செலவாகும். அந்தவகையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக ரூ.4,555 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

  இதைப்போல அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியதாகவும் சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. #LawPanel #SimultaneousPolls