என் மலர்
நீங்கள் தேடியது "cctv footage"
- டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் கடந்த 23-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் இதுவரை அடையாளம் தெரியாததால், மாயமானவர்கள் பட்டிலை கொண்டு அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரும் உள்ளனரா? என்றும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் அடையாளங்களோடு யாரேனும் உள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.