

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அய்யப்பன். இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார்.
சம்பவத்தன்று சுமார் 50 வாகனங்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.அதனை வைத்து போலீசார் 2 வாலிபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.