என் மலர்

  நீங்கள் தேடியது "youths"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது.
  • 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

  விளாத்திகுளம்:

  விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே நாய் குரைத்துள்ளது.

  இதனை கண்ட அந்த கிராம இளைஞர்கள் சந்தேகத்துடன் வந்து பார்த்தவுடன் 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

  இந்த நிலையில் குருவார்பட்டி மற்றும் கோடாங்கிபட்டி இளைஞர்கள் சேர்ந்து கயிறு மூலம் மானை மீட்டு ஆட்டோ மூலம் விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் குருமலை காப்பு காட்டில் மானை விட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீவித்யன்
  • நேற்று இரவு இவர் வேலை முடிந்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ஸ்ரீவித்யன் (வயது26). வெல்டர்.

  நேற்று இரவு இவர் வேலை முடிந்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்ட பின்னர் தூங்க சென்றுள்ளார்.

  இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு பழனிச்சாமி கழிவறைக்கு சென்று திறந்து பார்க்கும் போது அங்கு ஸ்ரீவித்யன் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் நிலையில் இருந்துள்ளார்.

  மற்றொரு சம்பவம்

  அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (34) வெல்டர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. நேற்று முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்ட நிலையில் காணப்பட்டார்.

  அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் முருகேசன் உயிரிழந்தார்.

  இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி மடத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மடத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது மடத்தூர் பி அன்ட் டி காலனி பகுதியில் 2 வாலிபர்கள் மது போதையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.

  இதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த செல்லையா என்ற திருமணி சிங் (வயது22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

  மேலும் தப்பி ஓடியவர் பி அன்ட் டி காலனியை சேர்ந்த குட்டி (22) என்பதும் தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி முறப்பநாடு வசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
  • மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்தை தாக்கி அவரிடமிருந்து செல்போன், செல்போன் பவர் பேங்க்,ஏ.டி. எம்.கார்டு, ரூ. 650-ஐ பறித்து சென்றனர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி முறப்பநாடு வசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

  வழிப்பறி

  இவர் கடந்த 25-ந் தேதி மடத்தூர் எடைநிலையம் அருகில் சர்வீஸ் ரோட்டில் தனது லாரியை சரிபார்த்து ஓட்டிச்செல்வதற்கு தயாராக நின்றிருந்த போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்தை தாக்கி அவரிடமிருந்து செல்போன், செல்போன் பவர் பேங்க்,ஏ.டி. எம்.கார்டு, ரூ. 650-ஐ பறித்து சென்றனர்.

  வாலிபர்கள் கற்களால் தாக்கியதில் காயமடைந்த லாரி டிரைவர் சண்முகசுந்தரம் தூத்துக்குடி அரசு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  2 பேர் கைது

  இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலை யில் இன்று காலை மடத்தூர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்

  அதில் அவர்கள் தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் பண்டுகரைசேர்ந்த சதீஷ் (20), கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்பதும் இவர்கள் 25-ந்தேதி லாரி டிரைவர் சண்முகசுந்தரத்தை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

  இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வாலிபர்கள் வந்த இரு சக்கர வாகனத்துடன் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

  மதுரை

  மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

  மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த வாலிபர், மகபூப்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார்.

  திருமண ஆசை காட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தெற்கு அனைத்து மாநில காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

  மதுரை மேல பனங்காடி-குலமங்கலம் மெயின் ரோடு கருப்பையா புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 19).இவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

  இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆன்லைன் முதலீடு செயலி மூலம் இளைஞர்களிடம் பல லட்சம் மோசடி நடைபெறுகிறது.
  • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

  திருச்சி:

  திருச்சியில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. பல்வேறு வகைகளில் விளம்பரங்கள் செய்து ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகிறது. வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி அதில் வேலை தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட் செயலி மூலம் பணத்தை இளைஞர்கள் இழந்து தவிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

  முசிறி, மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இதுபற்றி திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் கூறும் போது, இந்த மோசடிகள் ஆன்லைன் செயலி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் நடத்தப்படுகிறது. கல்லூரி பேராசிரியராக இருக்கும் ஒருவரே தனது அறியாமையால் ரூ.4.75 லட்சம் இழந்துள்ளார்.

  இந்த செயலியில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து கிளிக் செய்தால், மோசடி பேர்வழிகள் கொடுக்கும் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய அடுத்த நொடி பொருள் விற்கப்பட்டதாக டிஸ்ப்ளேயில் காண்பிக்கும். மேலும் அதற்கான கமிஷன் தொகையும் டிஸ்ப்ளேயில் தெரியும்.

  உதாரணமாக ரூ.500 செலுத்தி ஒரு பொருளை வாங்கினால், உங்களுக்கு ரூ.600 கணக்கில் சேர்ந்ததாக காண்பிக்கும். ஆனால் ரீபண்ட் மட்டும் உடனே தர மாட்டார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றால் மேலும் கூடுதல் கமிஷன் தொகை கிடைக்கும் என கவர்ந்திழுக்கும் தகவல் கொடுப்பார்கள். அந்த அடிப்படையில் மேற்கண்ட பேராசிரியர் ரூ.4.75 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.ஆனால் ரீபண்ட் அவருக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தற்போது புகார் தெரிவித்துள்ளார்.

  இதேபோன்று 20-க்கும் மேற்பட்ட பி.இ., எம்.இ., படித்த பட்டதாரி இளைஞர்கள் ரூ.5000 முதல் ரூ.5 லட்சம் வரை செலுத்தி ஏமாந்துள்ளார்கள். ஒரு இளைஞர் வங்கியில் கடன் பெற்று அந்த தொகையை போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்ட் செயலி மூலம் முதலீடு செய்து தவித்துக் கொண்டிருக்கிறார்.

  இந்த டிஜிட்டல் எம்.எல்.எம். மோசடியில் அதிகம் படித்த இளைஞர்களே சிக்கிக் கொள்கிறார்கள். மோசடி கும்பல் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்துவதில்லை.

  சாட்டிங் மட்டுமே நடக்கும். இதனால் நம்மை ஏமாற்றுபவர் யார் என்பதை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் இந்த மோசடி நடந்துள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் இதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறது.

  ரூ.5000, ரூ.6000 செலுத்தி விட்டு சுதாரித்து மேலும் பணம் செலுத்தாமல் தப்பித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் போட்ட தொகையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமாக தொடர்ச்சியாக பணத்தை முதலீடு செய்தவர்கள் தவித்து வருகின்றனர்.

  ஒரு பொருளை ஆர்டர் செய்தால் நம் கைக்கு அந்த பொருளும் வருவதில்லை. கமிஷன் தொகையும் உடனடியாக நம் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்வது கிடையாது. செயலி டிஸ்ப்ளேயில் வரும் தகவலை மட்டும் நம்பி படித்த இளைஞர்கள் ஏமாந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. முதலீடு செய்யும் போது இது சாத்தியமா? என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  ஆன்லைன் மோசடியை பொருத்தமட்டில் உடனடியாக புகார் அளித்தால் மட்டுமே வங்கி கணக்கை முடக்க முடியும். மோசடி பேர்வழிகள் பணத்தை எடுத்து விட்டால் மீட்பது கடினமானது. எனவே இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
  • திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் ராய பண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். இவரது வீட்டுக்குள் கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் முககவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சங்கமேஸ்வரன், அவரது மனைவி, மகள் ஆகியோரை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து தப்பினர்.

  இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ் குமார் மேற்பார்வையில் கொங்கு நகர் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

  இந்த வழக்கில் கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி மருகல் குறிச்சியை சேர்ந்த வானமாமலை (வயது 22), நல்லகண்ணு (21) ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குண்டாறு நீர்த்தேக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
  • இப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் திறந்த வெளியில் மது அருந்துவது பொது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

  செங்கோட்டை:

  செங்கோட்டையை அடுத்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்காசி மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்பிய இந்த நீர்த்தேக்கத்திற்கு விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

  அழகிய ரம்மியமான இயற்கை அழகு மற்றும் நெய்யருவி உள்ளிட்ட பல்வேறு தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு நீர்த்தேக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

  குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில்சுவர்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், நீச்சல் அடித்தும் உற்சாகமாக நீராடி வருகின்றனர்.

  இதனால் ஆபத்து நேரிடும் அபாயம் ஏற்படுகிறது.

  அணையின் மதில் சுவற்றில் அமர்ந்து நீச்சல் அடித்து குளிக்கும் வாலிபர்களை தடுக்கவோ, தடுத்து நிறுத்தவோ துறை சார்ந்த அரசு அதிகாரிகளோ, அலுவலர்களோ இல்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

  இது ஒரு புறம் இருக்க இப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் திறந்த வெளியில் மது அருந்துவது பொது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. இங்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி நிறுத்திடவும், அணைக்கட்டியின் மேல் குளிக்கும் வாலிபர்களை தடுத்து நிறுத்துவதுடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
  • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

  சென்னிமலை:

  சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

  பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

  இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

  மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

  இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

  இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

  விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஞ்செட்டி அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

  தேன்கனிக்கோட்டை:

  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.

  2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.

  மாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 4 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #UPGirlMolested
  முசாபர்நகர்:

  உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக நேற்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற 4 இளைஞர்கள், அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

  அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமியை நான்குபேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

  இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #UPGirlMolested
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram