என் மலர்
தமிழ்நாடு
கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்- 3 பேர் கைது
- கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளை கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சிலர் ரெயில் நிலைய நடைமேடையில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை பிடுங்கி கையில் சுத்திக்கொண்டே செல்கின்றனர். அப்போது ரெயிலுக்கு காத்திருக்கும் சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் போதையில் தாக்குகிறார்கள்.
ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் பார்ப்போரை அச்சமடையச் செய்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய போதை இளைஞர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுபாஷ் (20), இப்ராஹிம் (23) மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கஞ்சா போதையில் அட்டூழியம்! - 3 இளைஞர்கள் கைது இடம் :இந்து கல்லூரி ரயில் நிலையம், சென்னை#collagestudent #Drugs #railwaystation #Avadi #viralvideo #maalaimalar pic.twitter.com/htQDjMRQ8W
— Maalai Malar தமிழ் (@maalaimalar) November 26, 2024