என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வறிக்கை"

    • சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத்.
    • கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது.

    2014இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினார். அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர்.

    இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமர்நாத் திடீர் என அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

    அதன் பிறகு, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள திரு. ஸ்ரீராமன் என்பவரை இந்தியத் தொல்லியல் துறை நியமனம் செய்தது.

    மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவுறும் தறுவாயில், கீழடியில் மேற்கொண்டு அகழாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், கிடைத்த பொருட்களே மீண்டும் கிடைப்பதாகக் கூறி ஆய்வினைத் திரு. ஸ்ரீராமன் நிறைவு செய்தார்.

    அதன் பிறகு, கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணணி தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது 10ஆம் கட்ட அகழாய்வுப் பணி, தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தொல்லியல் ஆய்வுலகில் இந்த ஆய்வறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அசாமைத் தொடர்ந்து கோவா, பிறகு, மறுபடியும் சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.

    இதில் கீழடியில் நிலவிய கலாசாரம். அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள். நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5.765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

    அதன் பின்னர், 2 ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. ASI இயக்குநர் திரு. நாயக், இரண்டு நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, தேவையான திருத்தங்களைச் சேர்த்து, கீழடி அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு திரு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.

    அறிக்கையில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகள், விரிவான தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், விரிவான அறிவியல் சோதனை முடிவு ஆவணங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது பதிலில் விளக்கினார்.

    இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆய்வில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது. அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை.

    இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும்.

    சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது.

    ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. யுகம் யுகமாக, காலகாலமாக நீடித்து நிலைத்து நிற்கும் தமிழ் மண். சாதாரணமானது அன்று ஒரு பெரும் கலாசார எரிமலை.

    அதைத் தொட நினைத்தால், வினைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், ஒன்றிய பா.ஐ. மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது. பின்விளைவுகளை அனுபவித்துத்தான் புரிந்துகொள்வோம் என்று அவர்கள் எண்ணினால். அந்த அறியாமையைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    ஒன்றிய அரசில் இருக்கும் இவர்கள்தான் இப்படி என்றால். இங்கு இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களான கபட நாடகத் தி.மு.க. போடும் நாடகம் இன்னும் மோசமாக இருக்கிறது. தங்கள் ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளரின் குடும்பத்திற்கு எதிராகவோ ஊழல் புகார்களும் கெட்ட பெயர்களும் எழுகிற போதெல்லாம், தமிழ், தமிழர் என்ற முகமூடியை அணிந்து கம்பு சுற்றும் தி.மு.க.வின் கபட நாடக அரசியலைத் தமிழக மக்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர்.

    கீழடியின் பெருமையை மறைக்க உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க.வுடன். வெளியே மட்டும் எதிர்ப்பு வேடம் போட்டுக்கொண்டு. குடும்ப நிதியைக் காப்பதற்காக ஒரே போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, மறைமுகமாக ஒத்து ஊதும் தி.மு.க.விற்கும் சேர்த்துச் சொல்லிக்கொள்கிறோம்: தமிழ், தமிழர் நாகரிக வானத்தை எந்தப் புழுதிப் போர்வையையும் போர்த்தி அழுக்காக்கிவிட இயலாது.

    அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ துணைபோகும் சக்திகளும் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்பதை எங்கள் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
    • 'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊடகங்களின் நிலை மோசமாக இருப்பதாகஉலகில் வேறெங்கும் இல்லாத அளவில்.. இந்தியா பற்றி தெற்காசிய பத்திரிகை சுதந்திர அறிக்கையில் பகீர்(2024-25) கூறுகிறது.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களில் ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் திட்டமிட்ட முயற்சிகள் தொடர்கின்றன.

    நம்பிக்கையின்மை, சுயாதீன டிஜிட்டல் தளங்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகள், அத்துடன் போலி தகவல்களின் பெருக்கம் உள்ளிட்ட பல சவால்களை ஊடகத் துறை எதிர்கொள்கிறது என்பதை அறிக்கை கூறுகிறது.

    'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது. சமீப காலங்களில் எட்டு ஊடக ஊழியர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இந்தியாவில் ஊடக சுதந்திரத்தைத் தடுக்க சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

    அரசாங்கத்தை விமர்சிக்கும் அறிக்கைகளை வெளியிடுவதற்காகப் பத்திரிகையாளர்களும் ஊடக நிறுவனங்களும் சட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. அரசாங்கம், தேசத்துரோகம், UAPA மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் போலிச் செய்திகளின் போக்கு அதிகமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 

    • துறை சார்ந்த அலுவலர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் லால் வேனா பார்வையிட்டார்.தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    பின்னர் லால்வேனா கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டப் பணிகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை மேம்படுத்தும் வித மாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமன்றி துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டு பணிகளின் நிலை குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்நத அலுவ லர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

    துறை சார்ந்த அலுவ லர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படை யில் அடுத்த கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா பள்ளியில் அறிவியல் மாநாடு நடந்தது.
    • நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வறிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டின் 2-வது பகுதி நடைபெற்றது, பள்ளி தாளாளர் குமரேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செந்தில் குமார், பள்ளி ஆலோசகர் பாரதி பள்ளி நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக வைமா வித்யாலயா பள்ளி தாளாளர் திருப்பதி செல்வம் மற்றும் மகாத்மா வித்யாலயா பள்ளி தாளாளர் முருகேசன் மற்றும் பலர் விழாவை கலந்து கொண்டனர்.

    ராஜ பாளையம், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 230 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டது. கல்லூரி பேரா சிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். வழிகாட்டி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநில செயலாளர் பால கிருஷ்ணன் வழிகாட்டி ஆசிரியர்களிடம் உரை யாற்றினார். நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வ றிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    • 6 முதல் 14 வயது வரையுடைய குழந்தைகளின் கல்வி சேர்க்கை அதிகரிப்பு.
    • 5.6 சதவீத இளைஞர்கள் மட்டுமே தொழில் பயிற்சி சார்ந்த படிப்புகளில் சேர்கின்றனர்.

    நாட்டில் மாணவர் சேர்க்கை நிலை குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொண்டு இந்த அசெர் அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்தாண்டுக்கான ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    6 முதல் 14 வயது வரையுடைய குழந்தைகளின் கல்வி சேர்க்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் 96.6 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2014-ல் 96.7 சதவீதமாகவும், 2018-ல் 97.2 சதவீதமாகவும், 2022-ல் 98.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 

    14 முதல் 18 வயது வரை உடைய இளைஞர்களில் 86.8 சதவீதம் பேர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுகின்றனர். அவர்களில் 55 சதவீதம் பேர் மானுடவியல் (தத்துவம், ஆன்மிகம், மொழியியல், மொழி, வரலாறு, கலை படிப்புகள்) படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். இதற்கு அடுத்தப்படியாக, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளை, இளைஞர்கள்

    'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளை பொருத்தவரை ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கை பெறுகின்றனர்.

    14 முதல் 18 வயது வரையுடைய இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடங்களை அவர்களின் மாநில மொழியில் சரளமாக படிக்க இயலவில்லை.

    மேலும், 5.6 சதவீத இளைஞர்கள் மட்டுமே தொழில் பயிற்சி மற்றும் அது சார்ந்த படிப்புகளில் தற்போது சேர்க்கை பெறுகின்றனர்.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பொய் வழக்குகள் போடப்பட்டன
    • நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டார்.

    அரசுகளுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் குறிவைக்கப்படுவதாக க உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பணமோசடி, வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், சட்டவிரோத, நிதி மோசடி உள்ள பொய் வழக்குகள் போடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டதை இந்த சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளது.

     

     

    இதுபோல உலகம் முழுவதும் உள்ள பல அரசாங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாக அவ்வமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை நியூஸ் கிளிக் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் கைதான குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
    • உயிருக்கு ஆபத்து இருந்தாலும் இந்த சட்டவிரோத இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. முதல் 5 நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அந்த அறிக்கையை பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    அதில், 'கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். உயிருக்கு ஆபத்து இருந்தாலும் இந்த சட்டவிரோத இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது. சுமார் 40 சதவீதம் பாகிஸ்தானியர்கள், இடம் பெயர விரும்புவதாக கூறி உள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.

    • 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.
    • இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.

    இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.

    ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    வாங்கும் திறன்:

    அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.

    ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு:

    இந்தியாவில் ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் செல்வம் அதிகரித்து வருவதைப் போல பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கவில்லை என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

    இதன் பொருள் ஏழைகள் வாங்கும் சக்தியை இழந்து வரும் வேலையில் ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஆனால் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.

    இந்த நுகர்வுத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, மக்களிடம் கடன் சுமை அதிகரித்து வருவதும், நிதி சேமிப்பு குறைந்திருப்பதும் முக்கியக் காரணம் என்கிறது ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. .இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி, இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திதுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    1990 ஆம் ஆண்டில், இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 34 சதவீதத்தை வைத்திருந்தனர். இன்று அதே 10 சதவீத மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.

     

    அதேசமயம், நாட்டின் ஏழ்மையான 50 சதவீத மக்களின் வருமானம் 22.2 சதவீதத்திலிருந்து வெறும் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாவும் மாறியுள்ளனர்.

    நசுங்கும் நடுத்தர வர்க்கம்:

    பணவீக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் கிட்டத்தட்ட தேக்க நிலையில் உள்ளது, அதாவது அவர்களின் சம்பளம் பாதியாகக் குறைந்துள்ளது.

    நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. மக்களின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.

     

    ஆனால் வருமானம் அப்படியே உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான உந்து சக்தியாக விளங்கும் நடுத்த வர்க்கத்தினர் நசுக்கப்பட்டு வருவதாகத் ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை நிறுவியுள்ளது.

    ×