என் மலர்
நீங்கள் தேடியது "freedom of the press"
- தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது
- முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் .
டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் ஊழல் நிறைந்த செய்தித்தாள்களில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது நான் 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். அது தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.
"நியூயார்க் டைம்ஸ் நீண்ட காலமாக என்னைப் பொய் சொல்லி அவதூறு செய்ய முடிந்தது. இது மீண்டும் நடக்காது. புளோரிடாவில் வழக்குத் தொடரப்படுகிறது" என்று அவர் கூறினார்.
முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் பின்னர் டிரம்புடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு கண்டன. வரவிருக்கும் டிரம்ப் நூலகத்திற்கு $15 மில்லியன் நன்கொடையாக வழங்குவதற்க ஏபிசி முன்வந்ததால் அதற்கு ஈடாக தனது வழக்கை டிரம்ப் கைவிட்டார்.
- தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- 'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊடகங்களின் நிலை மோசமாக இருப்பதாகஉலகில் வேறெங்கும் இல்லாத அளவில்.. இந்தியா பற்றி தெற்காசிய பத்திரிகை சுதந்திர அறிக்கையில் பகீர்(2024-25) கூறுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களில் ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் திட்டமிட்ட முயற்சிகள் தொடர்கின்றன.
நம்பிக்கையின்மை, சுயாதீன டிஜிட்டல் தளங்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகள், அத்துடன் போலி தகவல்களின் பெருக்கம் உள்ளிட்ட பல சவால்களை ஊடகத் துறை எதிர்கொள்கிறது என்பதை அறிக்கை கூறுகிறது.
'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது. சமீப காலங்களில் எட்டு ஊடக ஊழியர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் ஊடக சுதந்திரத்தைத் தடுக்க சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.
அரசாங்கத்தை விமர்சிக்கும் அறிக்கைகளை வெளியிடுவதற்காகப் பத்திரிகையாளர்களும் ஊடக நிறுவனங்களும் சட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. அரசாங்கம், தேசத்துரோகம், UAPA மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் போலிச் செய்திகளின் போக்கு அதிகமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
- இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.
- சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை விட நல்ல நிலையில் உள்ளன.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்துள்ளது . அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் 'Future Free Speech' என்னும் அமைப்பு பேச்சு சுதந்திரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.
பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஹங்கேரி (85.5) மற்றும் வெனிசுலா (81.8) போன்ற சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை விட நல்ல நிலையில் முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது குறித்த பேச்சு சுதந்திரம் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. தனிப்பட்ட பேச்சு, ஊடகம் மற்றும் இணையம் தொடர்பான தணிக்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
- அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது.
- இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.
பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.

இந்த விவகாரம் இவ்வாறாக புகைந்து வந்த நிலையில் அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு கிளம்பினார்.

இதையடுத்து அமெரிக்காவின் பசிபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் அசாஞ்சே ஆஜரான நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது. அப்போது, அமரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே, அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே, பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார்.
விசாரணையின் இறுதியில் அசாஞ்சே குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ரமானோ ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.

கடந்த 14 வருடங்களாக தாய் நாடான ஆஸ்திரேலியாவை விட்டு பிரிந்து இன்னல்களுக்கு ஆளான 52 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவின் சைபனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்புகிறார். அவரது வருகையை ஆஸ்திரேலிய அரசும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அவரது விடுதலைக்காகவும் பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும் உலகம் முழுவதும் போராடிய அவரது அபிமானிகள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
- மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது.
- பெண்கள் பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் நடமாடுவது, பண்டிகை கொண்டாட்டங்கள், ஆண்கள் சவரம் செய்வதுவரை அனைத்துக்கும் தனித்தனி விதிகள் உள்ளன.
குறிப்பாக பெண்களுக்கு உடை சுதந்திரம், கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021 அதிகாரத்துக்கு வந்த பின்னர் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதன் மேற்பார்வையிலேயே மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதாவது, உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் [living beings] புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.

இந்த புதிய விதியை ஆப்கனிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாலிபான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் செய்தி ஊடகம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய விதியை தீவிரமாக கடைபிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி பெண்கள் தங்களின் முகத்தை வெளியே காட்டவும், பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






