என் மலர்tooltip icon

    உலகம்

    The Newyork Times பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு
    X

    The Newyork Times பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு

    • தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது
    • முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.

    அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் .

    டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் ஊழல் நிறைந்த செய்தித்தாள்களில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது நான் 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். அது தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.

    "நியூயார்க் டைம்ஸ் நீண்ட காலமாக என்னைப் பொய் சொல்லி அவதூறு செய்ய முடிந்தது. இது மீண்டும் நடக்காது. புளோரிடாவில் வழக்குத் தொடரப்படுகிறது" என்று அவர் கூறினார்.

    முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிறுவனங்கள் பின்னர் டிரம்புடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு கண்டன. வரவிருக்கும் டிரம்ப் நூலகத்திற்கு $15 மில்லியன் நன்கொடையாக வழங்குவதற்க ஏபிசி முன்வந்ததால் அதற்கு ஈடாக தனது வழக்கை டிரம்ப் கைவிட்டார்.

    Next Story
    ×