search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "acquittal"

    • 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
    • இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.

    சேலம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க.வினர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

    இதையடுத்து, ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதாக 5 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.

    நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் உள்பட 5 பேரை விடுதலை செய்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். வழக்கில் வக்கீல்கள் விஜயராசா, குமார் ஆகியோர் ஆஜராகினர்.

    ×