என் மலர்
நீங்கள் தேடியது "sexually harassed"
- வட்டார குழந்தை நல அலுவலர் புகார்
- தொழிலாளி கைது
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, மலைக்கோவிலுாரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35) கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது பள்ளி சிறுவனை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி வட்டார குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து முருகேசன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
- செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
திருப்பூர் :
திருப்பூர் அனுப்பர்பாளையம், பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராக்கப்பன் (வயது 41). இவரின் 2-வது மனைவி ஜெயலட்சுமி, (30). முதல் மனைவியின் மகன் அருண்பாண்டியன் (19)
இந்த நிலையில் தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவரசு (26) ராக்கப்பனுடன் நெருங்கி பழகிவந்தார். அப்போது ஜெயலட்சுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கப்பன்கடந்த 2014 ஏப்ரலில் போன் செய்து திருவரசுவை தன் வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை சுத்தியலால் தாக்கியும், முகத்தை தலையணையால் அழுத்தியும் ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண்பாண்டின் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.திருவரசுவைக் காணவில்லை என அவரது தம்பி இளையராஜா அளித்த புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்த போது, இந்த கொலை தெரியவந்தது.கொலை தொடர்பாக 3பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.இதில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் 3பேரும் ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆபாச படங்களை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது
- தம்பதி மீது போக்சோவில் வழக்கு
திருச்சி :
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தான் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது 16 வயது மகளிடம் அருகில் வசிக்கும் எனக்கு தங்கை உறவு முறை உள்ள பெண் செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்துள்ளார்.
பின்னர் தனது மகளை அவளது கணவருடன் (சித்தப்பா முறை) உல்லாசமாக இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியும் உள்ளார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்துள்ளது.
ஆனால் கொலை மிரட்டல் அச்சத்தால் எனது மகள் விஷயத்தை வெளியில் கூறாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து இருந்துள்ளார். இப்போது தான் என் மகள் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து கூறினார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா, சித்தி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த அந்த தம்பதியினர் தலைமறைவாகி விட்டனர். சிறுமிகள், குழந்தைகளுக்கு வெளி நபர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டு வந்த நிலையில் சித்தப்பா முறையில் இருக்கும் உறவினரும், அவரது மனைவியும் சேர்ந்து துன்புறுத்தியது பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
- கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார்.
- ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் மாணவிக்கும், ஆழியாறு பூங்காவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த உட்டாம் பாவூரி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர் கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார். மேலும் அவர் பஸ்சில் செல்லும் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
ஆழியாறு போலீசார் சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆழியாறு போலீசில் ஒப்படைத்தனர்.
10-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த உட்டாம் பாவூரி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் தனது தந்தை தன்னை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை செய்ததாக 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்வபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பீகாரில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்புக்காக நொய்டா வந்த சிறுமியின் குடும்பம் சிஜார்சி எனும் கிராமத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளியான சிறுமியின் தந்தை போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். பெற்ற மகளை வீட்டில் அடைத்து வைத்து அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார்.
அவரது தந்தையிடம் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தப்பித்த சிறுமி உதவிக்காக காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் இந்த கொடூர செயல் சிறுமியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது. ஆனால் இது குறித்து வெளியில் தெரியக்கூடாது என அவர் மிரட்டியதால் தாயும், சிறுமியும் இது பற்றி வெளியில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.