9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. சகோதரரின் பராமரிப்பில் உள்ளார்.
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த மாணவி, தற்போது சகோதர ரின் பராமரிப்பில் உள்ளார்.

சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் (வயது 44) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படு கிறது. இதுகுறித்து சிறுமி குடும்பத்தினரிடம் தெரி வித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசா ரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com