கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரும்பு கடை உரிமையாளர்

சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்தார். பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரும்பு கடை உரிமையாளர்
Published on

கோவை,

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் வீட்டு அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வரும் பெருமாள் (வயது 40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாய்க்கும், அவரது தந்தைக்கும் இடை யே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு திரும்பினார்.

கணவர் மீது கோபத்தில் இருந்த அந்த பெண், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாளின் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

அப்போது இரும்பு கடை உரிமையாளர் பெருமாள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

அவர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருப்பு கடை உரிமையாளர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com