என் மலர்
செய்திகள்

உ.பி.யில் பெற்ற மகளையே 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போதைக்கு அடிமையான தந்தையால் கடந்த 3 ஆண்டுகளாக மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் தனது தந்தை தன்னை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை செய்ததாக 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்வபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பீகாரில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்புக்காக நொய்டா வந்த சிறுமியின் குடும்பம் சிஜார்சி எனும் கிராமத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளியான சிறுமியின் தந்தை போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். பெற்ற மகளை வீட்டில் அடைத்து வைத்து அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார்.
அவரது தந்தையிடம் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தப்பித்த சிறுமி உதவிக்காக காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் இந்த கொடூர செயல் சிறுமியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது. ஆனால் இது குறித்து வெளியில் தெரியக்கூடாது என அவர் மிரட்டியதால் தாயும், சிறுமியும் இது பற்றி வெளியில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story