search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court judgement"

    • வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
    • செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம், பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராக்கப்பன் (வயது 41). இவரின் 2-வது மனைவி ஜெயலட்சுமி, (30). முதல் மனைவியின் மகன் அருண்பாண்டியன் (19)

    இந்த நிலையில் தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவரசு (26) ராக்கப்பனுடன் நெருங்கி பழகிவந்தார். அப்போது ஜெயலட்சுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கப்பன்கடந்த 2014 ஏப்ரலில் போன் செய்து திருவரசுவை தன் வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை சுத்தியலால் தாக்கியும், முகத்தை தலையணையால் அழுத்தியும் ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண்பாண்டின் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.திருவரசுவைக் காணவில்லை என அவரது தம்பி இளையராஜா அளித்த புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்த போது, இந்த கொலை தெரியவந்தது.கொலை தொடர்பாக 3பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.இதில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் 3பேரும் ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றம் 17 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே மானோஜிப்பட்டி பகுதி அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர்கள் சிறுமியின் பெற்றோர். இவர்கள் கடந்த 4.6.2012 அன்று அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சிறுமியுடன் சென்றுள்ளனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ரெட்டிப்பாளையம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சத்தியராஜ்(வயது25) என்பவர் மிட்டாய் வாங்கிக் கொடுத்து அருகில் உள்ள சுடுகாட்டிற்கு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.

    இதில் மயங்கிய சிறுமியை சத்தியராஜ் தூக்கி வந்து ஒரு வீட்டு வாசலில் போட்டு விட்டு தப்பி சென்றார். அப்போது சிறுமியை காணாததால் அவரை தேடிவந்த சிறுமியின் உறவினர் சத்தியராஜை பார்த்து விட்டு விரட்டி சென்றுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாய் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணை நடத்தி சத்தியராஜை கைது செய்தார். இந்த வழக்கு பற்றிய விசாரணை தஞ்சை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கில் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பில், சத்தியராஜிக்கு சிறுமியை கடத்தியதற்காக 7 ஆண்டும், சிறுமியை கற்பழித்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் என 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதமும், 17 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தர விட்டார்.

    இதையடுத்து சத்தியராஜை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து திருச்சி மத்திய சிறையில் கொண்டு அடைத்தனர்.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார், தலையாரிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    சிவகங்கை:

    ராமேசுவரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு தாசில்தாராக பணியாற்றியவர் சவுந்தரராஜன். அவரிடம் வெளிச்சம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் மீன்வளர்ப்பு தொழில் தொடர்பாக அனுமதி கோரி ஒரு விண்ணப்பம் அளித்தார். இந்த நிலையில் அதற்கான அனுமதியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்கும்படி தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோர் கேட்டார்களாம். அதற்கு கருப்பையா தயங்கியதால், பின்பு இருவரும் ரூ.5 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து கருப்பையா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் ஏற்பாட்டில் கடந்த 18.9.2004 அன்று ரூ.3 ஆயிரத்தை, தாசில்தார், தலையாரியிடம் கருப்பையா கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் மீதான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தாசில்தார் சவுந்தரராஜன், தலையாரி நாகரத்தினம் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்து படிக்க சென்றார். 

    கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் 1-ந் தேதி சிறுமியை அவரது பாட்டி குளிக்க வைத்தார். அந்த நேரம் சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இது குறித்து கேட்டபோது முதியவர் மணி (62) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

    இது குறித்து சிறுமியின் பாட்டி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து கல்லாவி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை துன்புறுத்தி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
    நெய்வேலி பகுதியில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சித்ரா கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அதேபோல் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த மணிபாலா (வயது 31) என்பவர் நடைபயிற்சி சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

    அதுபோல் நெய்வேலி டவுன்ஷிப்பில் தேவகி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையும், நெய்வேலி 12-வது வட்டம் ஜானகி என்பவரிடம் 1½ பவுன் நகையும், 20-வது வட்டத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் 4 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. நெய்வேலி பகுதியில் மொத்தம் 10 பெண்களிடம் 50 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்கள் நெய்வேலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் நடத்திய விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த வசந்தராஜா (24) மற்றும் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் (22) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெய்வேலி கோர்ட்டில் நடந்து வந்தது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அரசு வக்கீலாக தேவசுந்தரி ஆஜரானார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வசந்தராஜா, செந்தில்குமார் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கணேஷ் இன்று உத்தரவிட்டார்.
    ×