search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor shop"

    • எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
    • மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரம் சாமநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி என்ற மாணவி தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.

    இதன் அருகே மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சில கல்லூரிகளும் உள்ளன. கோவிலுக்கு பெண்கள் நடந்து செல்கிறார்கள். குடிமகன்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    உடனடியாக மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

    இந்த கடிதத்தை பொதுநல மனுவாக எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து தெலுங்கானா தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆணையர், உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட இருக்கின்றனர்.

    கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய நாளான நாளைய தினத்தில், சத் பூஜை முன்னிட்டு டெல்லியில் நாளை ஒரு நாள் மட்டும் மதுபானக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாத் என்பது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்களால் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.

    இதுகுறித்து, ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, பிரதிஹர் சஷ்டி அல்லது சூர்ய சஷ்டி (சத் பூஜை) ஞாயிற்றுக்கிழமை உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம்- செட்டிபாளையம் ரோடு பிரிவில் அரசு மதுபான கடை எண் 1830 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால், அந்தக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பல்லடம் தாசில்தார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி மதுபான கடையை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுபான கடையை அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி அதே பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் அமைக்க, இடம் ஆய்வு செய்யப்பட்டது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், அந்தப் பகுதியில் மீண்டும் மதுபான கடை அமைக்க கூடாது. அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

    • மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
    • புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்துவாரா?.

    மதுரை

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயண சாமி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய் தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில்ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் ஊழல் அதிரித்தது. இதனை மக்களிடம் எடுத்து கூறிய தால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சிக்கு வந்து உள்ளது.

    கர்நாடக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்கு றுதிகளை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த பலி துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்து தான் வந்துள்ளது.

    ஆனால் புதுச்சேரி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடியிருப்புகள், பள்ளி அருகில் மதுக்கடைகள் திறப்பதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரெங்கசாமிதான் காரணம்.

    தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜனதா இரட்டை வேடம் போடு கிறது. திராணி இருந்தால் கள்ளச்சாராய விவ காரத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜி னாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்து வாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மது பிரியர்கள் செய்யும் இடையூறுகள் சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
    • இதனால் இந்த 2 மதுபான கடைகளையும் உடன்குடி நகரப் பகுதியை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி பஸ் நிலையம் எதிரில் ஒரு அரசு மதுபான கடையும், வடக்கு பஸ் நிலைய ரோட்டில் ஒரு மதுபான கடையும் பஸ்நிலையம் அருகில் இருப்பது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்பத்துடன் பஸ் நிலையம் வரும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

    மேலும் வடக்கு பஸ் நிலைய ரோட்டில் உள்ள மதுபான கடை அருகே ஒரு ஏ.டி.எம். அலுவலகம் இருக்கிறது. மது பிரியர்கள் அடிக்கடி இந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக சொல்லி உடைத்து விடுகிறார்கள். மது பிரியர்கள் செய்யும் இடையூறுகள் சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அவர்களின் பார்வைக்கு பயந்து பள்ளி செல்லும் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பெண்கள் பயந்து ஓடும் நிலை உள்ளது. இதனால் இந்த 2 மதுபான கடைகளையும் உடன்குடி நகரப் பகுதியை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும், விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கானத்தான்காடு, சண்முகநாதபுரம் பஞ்சாயத்தில் அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், கோட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், காவல்துறை சார்பு ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    கானாத்தான்காடு கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே டாஸ்மாக் மதுபானகடை அமைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சண்முகநாதபுரம் ஊராட்சியில் மதுபானகடையை அமைக்ககூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை மீறி நேற்று கடை திறக்கப்பட்டதால் கிராம மக்கள் கடை முன்பு திரண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நேற்று இரவு தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். மதுபானகடையை உடனே அகற்ற வேண்டும் இல்லை என்றால் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    • ராமநாதபுரத்தில் மதுபான கடையை அகற்றகோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சிக்கலை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் ஆதம் நகரில் செயல்படும் மதுபான கடையை அகற்ற வேண்டும், கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆயிஷா, மாவட்ட அமைப்பாளர் சதாம்ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞர் சங்கதலைவர் பாலா, மாவட்ட தலைவர் சந்தானதாஸ், தொழிற்சங்க தலைவர் லட்சுமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் ஜகுபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    • நெட்டப்பாக்கம் சாராயக்கடையில் ஒரு வாலிபர் அதிக குடிபோதையில் அங்கு சாராயம் குடித்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் சாராயக்கடையில் ஒரு வாலிபர் அதிக குடிபோதையில் அங்கு சாராயம் குடித்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    அப்போது அந்த வாலிபர் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது அங்குள்ள சால்னா கடையில் தடுப்புக்காக வைத்திருந்த இரும்பு தகரத்தில் மீது விழுந்தார்.

    உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்த சத்தியன்(வயது34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சத்தியனை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை புதிய பஸ் நிலையம் எதிரே ஒருவர் குடிபோதையில் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த வடிவேல்(47) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடிவேலை போலீசார் கைது செய்தனர்.

    • சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் சாலையில் நடந்து வந்தனர்.
    • வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிரா மத்தைச் சேர்ந்த வர்கள் சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் மடப்பட்டு நோக்கி சாலையில் நடந்து வந்தனர். அப்போது திருக்கோவிலூ ரிலிருந்து மடப்பட்டு நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.அமல்தாஸ் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது
    • 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்ப ப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்புறம் புதிதாக வர உள்ள மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே இருக்கும் பழைய கடையை அகற்றவும் அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத்தொகுதி பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    நிகழ்ச்சியில் அம்பை நகர பா.ஜ.க. தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவி மங்கள சுந்திரி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வகனி,அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் தங்கேஷ்வரன்,சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவரும் அம்பை சட்டமன்ற பொறுப்பாளருமான வழக்கறிஞர் ராம்ராஜ் பாண்டியன் கலந்து கொண்டார். நகர பொதுச்செயலாளர்கள் சுகுமார், சுதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராம கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவி வள்ளியம்மாள், நகர பிரபகாரி பால்பாண்டியன்,ஒன்றிய பிரபாகரி முத்து பாண்டி, மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை.
    • சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை.

    வீரபாண்டி:

    திருப்பூர் குன்னாங்கல்பாளையம் பாரதிதாசன் நகர் ,அம்மன் நகர் பொதுமக்கள் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: - எங்கள் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். திருப்பூரிலிருந்து டிகேடி. மில் வழியாக செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர் . பாரதிநகர் ,கெம்பே நகர் இடையே உள்ள பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க சிலர் முயன்று வருவதாக தகவல் வருகிறது. கெம்பே நகர் அருகில் தேவாலயமும் தனியார் பள்ளியும் உள்ளது. இங்கு மதுக்கடை அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    பொதுமக்கள் அந்த சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் . மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே மதுபான கடை அமைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சையில் அதிகாலையில் மதுக்கடையை திறந்து கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்தக்கடை சாலையோரமாக, குடியிருப்பு பகுதிகளின் அருகாமையில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த கடை அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மதுக்கடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடையில் தினமும் காலையில் உள்ளே சிலர் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது,

    இந்த மதுக்கடையில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×