என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டிட்வா புயல்: மதுபான கடைகளை மூட உத்தரவு
    X

    டிட்வா புயல்: மதுபான கடைகளை மூட உத்தரவு

    • புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.

    'டிட்வா' புயல் எச்சரிக்கை காரணமாக இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, புதுச்சேரியில் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது,

    மேலும், கனமழை எச்சரிக்கையால் இன்றும், நாளையும் அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபான விடுதிகள் மற்றும் கடைகளை இரவு 8 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×