search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு
    X

    அம்மன் நகர் பொதுமக்கள் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு  

    மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை.
    • சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை.

    வீரபாண்டி:

    திருப்பூர் குன்னாங்கல்பாளையம் பாரதிதாசன் நகர் ,அம்மன் நகர் பொதுமக்கள் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: - எங்கள் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். திருப்பூரிலிருந்து டிகேடி. மில் வழியாக செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர் . பாரதிநகர் ,கெம்பே நகர் இடையே உள்ள பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க சிலர் முயன்று வருவதாக தகவல் வருகிறது. கெம்பே நகர் அருகில் தேவாலயமும் தனியார் பள்ளியும் உள்ளது. இங்கு மதுக்கடை அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    பொதுமக்கள் அந்த சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் . மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே மதுபான கடை அமைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×