மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்-நாராயணசாமி பேட்டி

மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்துவாரா?.
மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்-நாராயணசாமி பேட்டி
Published on

மதுரை

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயண சாமி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய் தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில்ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் ஊழல் அதிரித்தது. இதனை மக்களிடம் எடுத்து கூறிய தால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சிக்கு வந்து உள்ளது.

கர்நாடக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்கு றுதிகளை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த பலி துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்து தான் வந்துள்ளது.

ஆனால் புதுச்சேரி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடியிருப்புகள், பள்ளி அருகில் மதுக்கடைகள் திறப்பதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரெங்கசாமிதான் காரணம்.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜனதா இரட்டை வேடம் போடு கிறது. திராணி இருந்தால் கள்ளச்சாராய விவ காரத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜி னாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்து வாரா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com