search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "judiciary"

  • 1949 நவம்பர் 26ல், அரசியல் நிர்ணய சபை உருவாக்கிய வடிவம் ஏற்கப்பட்டது
  • இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல

  வெள்ளையர்களின் காலனி ஆதிக்க ஆட்சியில் இருந்து இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது.

  பல மதங்கள், இனங்கள், சாதிகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவுகள் கொண்ட இந்திய மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் விதமாக நாட்டிற்கு ஒரு திசைகாட்டியாக விளங்க அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. இதை உருவாக்கி தரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை அரசியல் நிர்ணய சபை எனும் அறிஞர்களை கொண்ட குழு ஏற்று கொண்டது.

  1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கி தந்த அரசியலமைப்பு சட்டத்தை இந்திய பாராளுமன்றம் ஏற்று கொண்டது.

  இந்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலுக்கு வந்தது.

  இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் (சம்விதான் திவஸ்) என கொண்டாடப்படும் என 2015 அன்று மத்திய அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

  இந்த அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2015 அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இது சட்ட தினம் என கொண்டாடப்பட்டு வந்தது.

  அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள், உரிமைகள், கட்டுப்பாடுகள், சலுகைகள், விதிகள் மற்றும் விலக்குகள், வலியுறுத்தும் கடமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களை குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், இந்த அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களை மக்கள் நினைவுகூரும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

  சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம், சுரண்டலை மறுக்கும் உரிமை, தனது மதத்திற்கான சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

  இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல என்பதும் உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அதிக நீளம் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  "மக்களுக்காக, மக்களால், மக்களின் ஜனநாயகம்" என புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் 3 அங்கங்களாக விளங்கும் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக துறை ஆகியவற்றின் கடமைகளையே வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் என்பதே இதன் பெருமைக்கு ஒரு சான்று.

  அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் வலுவாகவும் மாற்ற இயலாததாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஓரு சில விதிமுறைகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப பாராளுமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளன.

  1950ல் ஏற்று கொள்ளப்பட்ட அரசியமைப்பு சட்டத்தில் 2023 செப்டம்பர் மாதம் வரை, 106 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையையே மிரட்டி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
  அல்வார்:

  ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 7ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

  ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

  காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. அவர்கள் மரியாதை என்பதையே மறந்துவிட்டனர். பின்தங்கிய சமுதாயத்தினரை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. டாக்டர் அம்பேத்கருக்கு அக்கட்சி பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கவில்லை.  காங்கிரஸ் நீதித்துறையை அரசியலில் இழுக்கிறது. நீதித்துறைக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அக்கட்சி தலைவர் ஒருவர், 2019 தேர்தல் வருவதால், அயோத்தி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார். அந்த கோரிக்கை நீதிபதி ஏற்காதபோது, கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என நீதித்துறையை மிரட்டுகின்றனர். எந்த பயமும் இல்லாமல், நீதியின் பாதையில் நடக்க வேண்டும் என நீதித்துறையை கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
  ×