என் மலர்

  நீங்கள் தேடியது "SupremeCourt"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க இயலாது என்று மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. #SupremeCourt
  புதுடெல்லி:

  ஆண்களுக்கான திருமண வயது 21 ஆக இருக்கிறது. இந்த திருமண வயதை 18 ஆக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அசோக்பாண்டே என்ற வக்கீல் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

  ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. இருபாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் எதுவும் இல்லை.

  18 வயது நிரம்பிய ஆண் வாக்களிக்கவும், ராணுவத்தில் சேரவும் அனுமதி அளிக்கும் போது திருமணம் செய்ய ஏன்? அனுமதிக்ககூடாது.

  இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.பவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.  மேலும் பொதுநலனுக்கு உகந்த வழக்கு இது அல்ல என்று கூறி மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லோக்ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #LokayuktaBill #SupremeCourt

  புதுடெல்லி:

  மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள், மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க பாராளுமன்றத்தில் லோக் பால் மசோதாவும், லோக் ஆயுக்தா மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

  இதை பின்பற்றி மாநிலங்கள் சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

  தமிழகம், காஷ்மீர், புதுவை உள்பட 11 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஜூலை 10-ந்தேதி வரை (இன்று) கெடு விதித்தனர்.

  லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

  இதைத்தொடர்ந்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதாவை தயாரித்து அதை நேற்று சட்டசபையில் நிறைவேற்றியது. இதுபற்றிய பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

  இன்று இந்த வழக்கு சுப்ரீம கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

  இந்த வழக்கில் புதுவை அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் லோக்ஆயுக்தா வரைவு மசோதா தயாராகி வருவதாகவும், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் சட்டம் நிறை வேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. #LokayuktaBill #SupremeCourt

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. #KudankulamPlant #SupremeCourt
  புதுடெல்லி:

  நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம் செயல்படுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக, 17 விதிமுறைகள் அடங்கிய பரிந்துரையை வழங்கியது. அதில் முக்கிய நிபந்தனை, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் கொண்ட கட்டமைப்பை அணுமின் நிலையம் 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.  இந்த 5 ஆண்டு கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரி இந்திய அணுமின்சக்தி கழகம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வசதியை கட்டமைப்பதற்கான தொழில் நுட்பம் முழுவதும் கைவராத நிலையில் அதனை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அதனால் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  இதற்கிடையே, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

  அதில் அணுக்கழிவுகளை உலைக்கு உள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் போதிய வசதிகளை கட்டி முடிக்கும் வரை கூடங்குளத்தில் உள்ள 2 உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்கும் வகையில், இந்திய அணுமின்சக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி முடிக்கும் வரை இரு அணுஉலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்து அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

  இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

  இந்த வழக்கில், கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்த நிலைத்தகவல் அறிக்கையை ஏற்கனவே இந்திய அணுமின்சக்தி கழகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தது. அந்த நிலைத்தகவலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

  மேலும் அதுவரை கூடங்குளம் அணு உலை இயங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், அணு உலையின் பாதுகாப்பு குறித்தும் விளக்கி தனியாக ஒரு மனுவை மனுதாரர் விரும்பினால் தாக்கல் செய்யலாம் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.  #KudankulamPlant #SupremeCourt #Tamilnews

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற உள்ள நிலையில் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது. #CauveryIssue #SupremeCourt
  புதுடெல்லி :

  தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின்  மேல் முறையீட்டை  விசாரித்தது. காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.

  காவிரி நதிநீர்  பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது வரைவு செயல் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

  இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு வழக்கு காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்பு தமிழக அரசு 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது. அவை வருமாறு:-

  1. காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும்.

  2. இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.

  3. காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூருவில் இருந்து மாற்ற வேண்டும்.

  இதேபோல் கர்நாடக அரசும் தங்கள் கருத்தை முன்வைக்க உள்ளது. வரைவு செயல் திட்டத்தில் உள்ள சில அம்சங்களைத் தவிர மற்றதை முழுவதும்  ஏற்றுக்கொள்வதாக கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  நீர் பயன்பாட்டிற்கு மாநில அரசுகளுக்கு சுதந்திரம் அளிக்க வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

  குறிப்பாக, தண்ணீர் அளவு மற்றும் பயன்பாடு குறித்து நதிநீர் பங்கீட்டு குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்று கர்நாடக வலியுறுத்த உள்ளது. #CauverIssue #SupremeCourt  
  ×