என் மலர்
நீங்கள் தேடியது "bail cancel"
- ரிதன்யா மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
- ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான விசாரணை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜாமின் மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும்.
- செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடு தேவையில்லை என நீதிபதிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்,"அமலாக்கத்துறையின் வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா? மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், " லஞ்ச வழக்கில் விசாரணை முடியாமல் பண மோசடி வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும் ? செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் அவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது சக கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது பினு உள்ளிட்ட சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அம்பத்தூர் துணை ஆணையர் முன்பு பினு சரண் அடைந்தார். சிறையில் அடைக்கப்பட்ட பினு, ஜூன் மாதம் 21-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில தினங்களாக காவல் நிலையத்திற்கு வரவில்லை. எனவே, அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிக்கை அனுப்பினர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கூட்டாளிகள் 7 பேருடன் பினு பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பினுவையும், கூட்டாளிகளையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ரவுடி பினு மற்றும் கூட்டாளிகைள அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், ஜாமீன் நிபந்தனையை மீறியதால் நீதிமன்றத்தின் மூலம் பினுவின் ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #RowdyBinu






